பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௪௧



- இவ்வாறு ஆரியவியல் உயிர்களைக் கொல்லவும், அவற்றைத் தின்னவும், அவ்வாறு தின்பது கரிசு(பாவம்) இல்லை என்றும், நல்வினையே (புண்ணியம்) என்றும் கூறுவதை நோக்குங்கால், ஏர் உழுவதால், கலப்பையால் உயிர்கள் மடிகின்றன என்றும் புலம்பி, அதனால் அவ்வுழவுத் தொழிலைப் பிராமணரும் கூடித்தியரும் செய்யக்கூடாதென மறுப்பது, உடல் உழைப்பைத் தவிர்ப்பதற்காகச் செய்துகொள்ளும் ஏமாற்றும் சூழ்ச்சியுமே ஆகும் என்க. அத்துடன் அத்தொழிலை வேறு ஆட்களை வைத்துச்செய்யச் சொல்வதும் அதனால் உயிர்வாழக் கருதுவதும் வஞ்சகமுமே ஆகும் என்க.

இனி, உயிர்க்கொலை செய்வதும், புலால் உண்ணுவதும் திருக்குறளால் தடுத்துரைக்கப்பெற்ற செயல்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆரிவியலை அறவே மறுத்தொதுக்கவே அவை எடுத்துரைக்கப் பெற்றன என்க. இவ்வகையில் கீழ்வரும் குறட்பாக்களை எண்ணிப் பார்த்து உண்மை உணா்க.

'அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்

பொருளல்லது அவ்வூன் தினல்'
– 254.

"செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

 உயிரின் தலைப்பிரிந்த ஊன்'
- 258

'அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று'
– 259.

'உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு'
- 261.

'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய்போல் போற்றாக் கடை'
- 315.

'அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும்'
— 321.

'ஒன்றாக நல்லது கொல்லாமை'
— 323.

'நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி'
— 324.

'நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக்

கொல்லாமை சூழ்வான் தலை'
- 325.

'நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்