பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௪௩



குருவை வணங்கும்போது, குரு, பிராமணனை 'இருக்கின்றாயா' என்றும், க்ஷத்திரியனை, 'நோயற்றிருக்கிறாயா' என்றும், வைசியனை 'சேஷமமாக விருக்கின்றாயா' - என்றும், சூத்திரனை 'சுகமாக விருக்கின்றாயா' என்றும் கேட்கவேண்டும்.

- மனு: 2 - 127.

'பத்து வயது பிராமணன், நூறு வயது சூத்திரன் தகப்பனும் புத்திரனும் ஆகிய மரியாதைக் குரியவர்கள்'.

- மனு: 2 - 135.

'சூத்திரன் 90 வயதிற்குப் பின்தான் எல்லாராலும் மதிக்கப்பட வேண்டும்'

- மனு: 2 - 137.

'பிராமணன் கட்டாயம் வேதம் படிக்க வேண்டும்' என்பது மனு:2 157, 158, 166, 167, 168 - ஆகிய சொலவகங்களில் வலியுறுத்தப் பெறுகிறது.

'பிராணமர்களைப் பேணுவதே தேவர்களையும் பிதுரர்களையும் வழிபடுவதற் கொப்பாகும்'

- மனு: 3 - 129, 130, 131, 132.

'பிராமணர்களைப் பரீட்சை செய்யக் கூடாது'

- மனு: 3 - 149.

'பிராமணர்கள் உண்பதை எந்தச் சாதியாரும் பார்க்கக் கூடாது.'

– மனு: 3 - 176.

'சூத்திரன் யாகம் செய்யக் கூடாது'.

- மனு: 3 - 178.

'வர்ணாச்சிரமங்களைக் கடைப்படிப்பவனே மேலான கதியை அடைகிறான்'.

- மனு 4 - 14.

'பிராமணன் பாட்டுப் பாடியோ, கூத்தாடியோ, விகடம் சொல்லியோ பிழைக்கக் கூடாது'

- மனு: 4 - 15.

'பிராமணன் தாழ்ந்த சாதி மக்களுடன் ஒரு மரத்து நிழலில் நிற்கக் கூடாது.'

- மனு: 4 - 79.