பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௪௪

முன்னுரை 


'பிராமணன் வேதம் ஓதுகையில் சூத்திரன் அருகே இருக்கக் கூடாது. அவ்வாறு கேட்ட சூத்திரன் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்'

- மனு: 4. – 99.

'பிராமணர்களை அவமானம் செய்யக் கூடாது'

- மனு 14 - 135, 136.

'இரவு நேரங்களில் பிராமணன் சூத்திரனோடு வழி நடக்கக் கூடாது.'

- மனு: 4 - 140.

'பிராமணனை அடிக்கக் கைதுாக்கினாலே நரகம்'.

- மனு: 4 - 166

'பிராமணன் துன்பம் தந்தாலும் அவனை அவமானப்படுத்தக் கூடாது'

- மனு: 4 - 238 237.

'எவனும் தன் குலத்தை மறைக்கக்கூடாது.' -

மனு: 4 - 255.

'பிராமணன் தன் தாய், தந்தை, குரு இவர்களின் பசிக்காக எந்த உயிரையும் கொல்லலாம்'.

- மனு: 5 - 22, 23, 27

.

- இவ்விடத்தில்,

'ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை

– 656.

- என்னும் திருக்குறள் கூறும் தமிழறத்தை ஓர்க.

'பிராமணன் உணவுக்காகவே எல்லா உயிர்களும் பிரமனால் படைக்கப்பட்டன.'

- மனு: 5 - 29 முதல் 32 வரை, 35-37.

'பிராமணனைக் காப்பாற்றப் பொய் சொல்லலாம்'

- மனு: 8 - 12

'சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கை அறுக்க வேண்டும்'.

- மனு: 8 - 270.

'சூத்திரன் பிராமணர்களின் பெயர் சாதி முதலியவற்றைச் சொல்லித் திட்டினால், பத்து அங்குலமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய