பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௪௬

முன்னுரை 



தஷ்யூக்கள் (தாஸர்கள்) எண்ணெய் தேய்த்துவிடுதல், கைகால் பிடித்தல்.

'குரும்பாண்டிகள் - மணியடித்தல், பிச்சையெடுத்து உண்ணுதல்.
செம்படவர்கள் படகு ஒட்டுதல், மீன் பிடித்தல்.
காருவாரன் (சக்கிலியர்) தோல் தொழில் செய்தல்.
பாண்டு சோபாகன் மூங்கில் வேலை செய்தல்,
ஆகிண்டிகன் அடியாட்களாக இருத்தல், கொலை
முதலியவற்றைச் செய்தல்; ஊர் காவல் செய்தல்,

சோபாகர் கொலை செய்தல்.

சண்டாளன் சுடுகாட்டைக் காவல் காப்பது.

மனு: 10 - 37முதல் 42 வரை.

'பிராமணர்களிடத்தில் வணங்காமையாலும், உபநயனம் பூணுரல் அணிதல் முதலிய செய்து கொள்ளாமையாலும் கூடித்திரியர் சூத்திரர்களாகிறார்கள்:

மனு: 10 - 43.

'சூத்திரர்கள் இருக்கின்ற தேசங்கள்; பெளண்டரம், ஒளண்டரம், த்ரவிடம், காம்போசம், யவனம், பாரதம், பால்ஹlகம், சீனம், கிராதம், தரதம், கசம் ஆகியவை. இங்குள்ளவர்கள் பிராமணர்களுக்கு அடங்காமையினாலேயே சூத்திரர்களாகிப் போனார்கள்.

- மனு: 10 - 44.

'ஸம்ஸ்கிருதமே உயர்ந்த பாஷை, சூத்திரர்கள் அனைவர் பேசுவதும் மிலேச்ச பாஷையே மிலேச்ச பாஷையைப் பேசுகிறவர்கள் அனைவரும் தஸ்யூக்கள். (தஸ்யூக்கள் - திருடர்கள்)

- மனு: 10 - 45,

'தஸ்யூக்கள் எனப்படுபவர்களும் அவர்கள் செய்யும் தொழில்களும்:

சூதன்-தேர்ோட்டுதல்; அம்பட்டன்-இரணவைத்தியம், வைதேகன் அந்தப்புரக் காவல் மாகதன் . கடல் வாணிகம், நிஷாதன்- மீன்பிடித்தல்; அயோகவன்,தச்சுவேலை; மேதன், ஆந்திரன், சஞ்சு - வேட்டையாடுதல்; ஷத்தா, உக்கிரன், புல்க்கசன் - உடும்பு, எலி பிடிக்கிறவன்; திக்குவணன் தோல் தொழில் செய்தல் வேணன்-தாளம் முதலிய வாத்தியம் வாசித்தல் இவர்கள் அனைவரும் பட்டணத்துக்கும் ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, மயானம் (சுடுகாடு) மலைக்காடு ஆகிய