பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார்

௧௩


நிலைகளைப் படிபதித்துக் காத்துவைத்துள்ள பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் பதினெண் கீழ்க்கணக்குள் சிலவும் ஆகிய யாவும் - நம் கையகத்தின் ஒரேயொரு பிடிக்குள்ளேயே அடங்கும் அளவின!1. இவையன்ன ஆயிரமாயிரமடங்கு அளவினவாக - அக்கால் உருவாக்கப் பெற்றிருந்த அரிய அக் கருத்துமணிக் கருவூலங்கள் இன்று எங்கே?! . நுண்மாண் நுழைபுலத்தில் விளைந்து முற்றிய அந் நெற்று நூன்மணிகள் இன்று எங்கே?!. . . .

“. . . . . . தமிழரின் பேதைமையினால் பாழான மண்ணிற்கும் - படியாதார் நெருப்பிற்கும் - பதினெட்டாம் பெருக்கிற்கும் - படையான சிதலுக்கும் - பற்பல பூச்சிக்கும் - பகைவரின் சூழ்ச்சிக்கும் இரையான தமிழ்நூல்கள், எத்துணை எத்துணையோ!. . . - என்றவாறு ஓரிடத்து அலமரலுற்று அயர்ந்தவாறு அரற்றுவார், - நம் செந்தமிழ்ப்பாவாணர் அவர்கள்! நாம் குன்றிருந்த அன்றிருந்து நம்மோடு நம்மவராகக் கலந்துறைவதுபோற் கரந்துறைந்தே வந்த கயவர்களான பார்ப்பனர்கள் - அன்றைய அரசர்கள் துணைக்கொண்டு - தமிழையும் - தமிழினமானத்தையும் எவ்வெவ் விடங்களிலெல்லாந் தட்ட வேண்டுமெனக் கருதினார்களோ - அவ்வவ்விடங்களிலெல்லாம் விடாது தட்டித் தொடர்வாராயினர்! (அன்று, அரசரைத் தட்டிக்கொடுத்துத் தட்டினர்! இன்று, அமைச்சரைத் தட்டிக்கொடுத்துத் தட்டுகின்றனர்! அத்தோடு, அமைச்சராகவே ஆகிநின்று ஆகுலத்தோடு தட்டுகின்றனர்! நம்மவர் யாவரும் தட்டுக்கெட்டுத் தடுமாறி இடம்மாறி ஏமாறி இடர்ப்பட்டவாறே கிடக்கின்றவராயினர்! அதற்கும் முன்னிடாகக் கடலுங்கூட, நம்மினத்தின் மூலவர்களையும் மூலங்களில் பலவற்றையும் வேண்டியமட்டுந் தாண்டிவந்து உட்கொண்டு ஒலியார்த்தது! இம் மரபுவழிச் செய்தியை “வாரணம் கொண்டது.அந்தோ வழிவழிப் பெயரும் மாள!” என்றவாறு வரும் பழைய பழம்பாட்டொன்றும் பதிவு காட்டும்! . . . . நினைக்க - நினைக்க, நம் நெஞ்சகங்களில் குமுறல்களும் - அவலவுணர்வின் கொப்புளிப்புகளும் பொருமல்களும் செறுமுகின்றன!

இயற்கைச் சீற்றங்களாலும், கூற்றன்னாராகிய மாற்றாரின் கொடுஞ் சூழ்ச்சிகள் தோற்றிய மாற்றங்களாலும் நாம் இழந்தும் இழிந்தும் சுழிந்தும் நிற்கும் நிலைகளினும், நம் தமிழ முன்னோர் தாம் கொண்டு பேணிய பேணாமைப்பண்பால் நெகிழ்த்தனவும் நீத்தனவுமான நிலைகளே மிகப் பேராளமாகுவன! இவ் இடைக்காலத் தமிழரின் எள்ளத்தகும் அப்போக்கை - “யாதொன்றும் பேணாமை” (833) என்னும் சொற்றொடர்