பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௪௭


'இவர்களுக்கு உலோகப் பாத்திரம் கூடாது. இவர்கள் நாயும், கழுதையுந்தாம் வளர்க்க வேண்டும் பசுக்களை வைத்துக் கொள்ளக் கூடாது'.

'அவர்கள் பிணத்தின் துணிகளையே உடுக்க வேண்டும். உடைந்த சட்டிகளில்தான் உண்ண வேண்டும். இரும்பு, பித்தளை நகைகளையே அணிய வேண்டும். அவர்கள் தொழிலுக்காகத் திரிந்து அலைய வேண்டும்'.

'அவர்களோடு பேசவும், அவர்களைப் பார்க்கவும் கூடாது. அவர்கள் தங்கள் தங்கள் சாதிகளில்தாம் சம்பந்தம் கொள்ள வேண்டும்'.

‘இவர்களுக்கு நேரே அன்னம் (சோறு) போடக் கூடாது. வேலையாட்கள் வழியாகத்தான் போட வேண்டும். அதுவும் பாத்திரங்களாலேயே போட வேண்டும். இரவில் அவர்கள் ஊருக்குள் வரக்கூடாது'. - மனு : 10-54

'அவர்கள் அடையாளத்தோடுதான் சஞ்சரிக்க வேண்டும்; அநாதைப் பிணங்களை அவர்களே எடுக்கவேண்டும்'

'அரசன் கொலை செய்யச் சொல்லுகிறவர்களை அவர்கள் கொல்ல வேண்டும். கொலை செய்யப்பட்டவர்களின் துணிகள், நகைகள், படுக்கை இவற்றை எடுத்துக்கொள்ளலாம்' - மனு : 10-55

'அவர்கள் நல்ல உடை உடுத்தாலும் செய்யும் தொழிலால் அவர்களை ஈனர்கள் (இழிந்தவர்கள்) என்று அறிதல் வேண்டும்'. - மனு : 10-56

'குறும்பும், இழிமொழியும், கொடுமை, துன்புறுத்துவது, இழிதொழில், நல்லொழுக்கிமின்மை - இவையும் ஈனனைக் காட்டும்'. - மனு : 10-57


'ஈனன் தன் பிறப்பை மறைக்கக் கூடாது. தாய் தொழிலையோ, தந்தை தொழிலையோ தான் இவர்கள் செய்ய வேண்டும்'. - மனு : 10-58

'ஈனன் தன் பிறப்பை மறைக்கக்கூடாது. தாய் தொழிலையே தகப்பன் தொழிலையோதாம் இவர்கள் செய்ய வேண்டும்'. - மனு : 10-59

இவர்கள் மிகுதியாகப் பிறந்து வளர்கிற நாடு விரைவில் அழியும்'.