பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

கசகூ


- மனு 10 - 102 முதல் 109 வரை

'ஆனால், பிராமணன் கீழான சூத்திரர்களிடத்தில் தானம் வாங்கிப் பிழைப்பதைவிட, வயல்களில் சிந்தின நெல்லைப் பொறுக்கித் தின்று உயிர்வாழலாம்'

- மனு: 10 - 112.

'சூத்திரன் பிராமணனையே தொழுது வாழவேண்டும்'

- மனு: 10- 13.

'பிராமணன் சாரமில்லாத பொருள்களைச் சூத்திரனுக்குத் தானமாகக் கொடுக்கலாம் பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரத்தையும், உடுத்திக் கிழந்த கந்தல் ஆடையையும், கெட்டுப் போன தானியங்களையுமே சூத்திரனுடைய வாழ்க்கைக்குக் கொடுக்க வேண்டும்'

- மனு: 10 - 125

'சூத்திரன் இப்பிறவியில் பிற சாதியாரைத் துரவிக்காமல் இருந்தால் தான் மறுபிறவியில் நற்கதி அடைகிறான்.

'சூத்திரன் எவ்வளவு திறமை உடையவனாக இருந்தாலும் மிகு பொருள் சம்பாதித்தாலும், கண்டிப்பாக அவனைத் தன் குடும்பத்திற்குத் தேவையானதைவிட மிகுதியான பொருள் சேர்க்க விடக் கூடாது. அவ்வாறு அவனைப் பொருள் சேர்க்க விட்டால், அப்பொழுது பிராமணனை மதிக்க மாட்டான்; அது பிராமணனுக்கு ஆபத்தாய் முடியும்'

மனு: 10 - - 128, 129.

'பிராமணர்களுக்குப் பசு, நிலம், பொன் இவற்றைத்தானம் செய்தவர்கள் சுவர்க்கம் புகுவர்'

- மனு: 11 - 6

‘மிகுதியான செல்வமும் பசுக்களும் வைத்து இருக்கிறவனிடம் பிராமணன் கேட்டும் கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றைப் பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு’

'யாகத்திற்கு வைசியனுக்குப் பொருள் இல்லாவிடில் சூத்திரர்களின் வீட்டிலிருந்து கேட்டோ கேளாமலோ எடுத்துக் கொள்ள வேண்டியது'

மனு: 11 - - 12, 13.

'சத்திரியனோ பிராமணன் பொருளை இவ்வாறு எடுக்கக்கூடாது.'

-மனு: 11- 18.

'யாகம் செய்பவன் பொருள்கள் தேவதையின் பொருள்கள். யாகம் செய்யாதவன் பொருள்கள் அசுரர்களின் பொருள்கள். ஆகையால் அசுரர்