பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கரு௦

முன்னுரை 


பொருள்களைத் தேவதைகளின் பொருள்களாக்குவது தர்மமே.

- மனு: 11 - - 20.

- இவ்விடத்தில் கீழ்வரும் திருக்குறள் (தமிழியல்) கருத்துகளை ஒர்ந்து உண்மை உணர்க.

நல்லாறு எனினும் கொளல்தீது, மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று' - – 222.

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் - – 225.

'உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல் - — 282.

'களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்' - — 283.

'தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று --274

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர் -- 174.

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும் - ~ 176.

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து - – 205.

இனி, மேலும், ஆரியவியலின் பிராமண ஏற்றங் கூறும் வர்ணாச்சிரமக் கருத்துகளைப் பாருங்கள்.

'பிராமணனே தர்மத்திற்கு அடிநிலை ஆவான்

'பிராமணர்கள் தேவர்களைவிட உயர்ந்தவர்கள்.

எனவே அவர்களும் பூஜிக்கத் தக்கவர்களே

மனு: 1 - - 83, 84, 85

'யக்ஜம் (வேள்வி) செய்பவனே யஜ்மான் அவன் மனைவியே பத்தி:

மனு: 3 - - 178, 179,

இனி, அறவியல் (நீதி நெறி, தர்மவியல்) கோட்பாடுகளில் எவ்வாறு தமிழியலுக்கு ஆரியவியல் மாறுபட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.