பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

கருக


'மனுவால் எந்த வர்ணத்தார்க்கு என்ன தர்மம் விதிக்கப்பட்டதோ அதுவே வேத சம்மதமாகும். ஏனெனில் அவர் வேதமுணர்ந்த பிர்ம்ம ஞானி'

மனு: 2 7.

“எவனொருவன் இந்த மனுசாஸ்த்திரத்தைத் தர்க்க ரீதியான யுக்தியினால் ஆட்சேபிக்கிறானோ, அவனை ஊரைவிட்டுத் துரத்திவிட வேண்டும். ஏனென்றால் அவன் வேத நிந்தகனான நாஸ்திகன் ஆவான்'

மனு 2 10.

'வேதத்தில் சொல்லப்பட்டவைதாம் தர்மம், வேதத்தில் மாறுபடச் சொல்லியிருந்தாலும் அது தர்மமே!'

மனு: 2 13, 14.

'பிராமணனிடம் அரசன் தீர்வை பெறக்கூடாது. அவன் பசியினால் துன்பப்படும்படி வைக்கக் கூடாது; பிராமணன் துன்பப்படும் நாடு அழியும், தந்தை தன் பிள்ளைகளைக் காப்பது போல் அரசன் பிராமணர்களைக் காக்க வேண்டும். அரசன் பிராமணர்களுக்கு உதவினால் நாடு விருத்தியடையும்'

மனு: 7 133 -136

'வழக்குகளை விசாரிக்கத் தனக்கு அடுத்தபடி பிராமணனையே அரசன் அமர்த்த வேண்டும். பிராமணர்க்ள் இல்லாததை நீதிசபை எனலாகாது. சூத்திரன் ஒருபோதும் வழக்கை விசாரிக்கக் கூடாது.'

மனு: 8 9, 10, 11, 17,

'பிராமண குலத்தில் பிறந்தவன் கர்மானுஷ்டானம் இல்லாதவனாயினும், ஒழுக்கம் கெட்டவனாயினும் அரசனைப் போலவே தீர்மானம் செய்யலாம். (அஃதாவது ஆட்சி செய்யலாம். பிறரைத் தண்டிக்கலாம், சூத்திரன் ஒரு போதும் அப்படிச் செய்யலாகாது.'

மனு: 8 20.

'பிராமணன் சூத்திரன் தேடிய பொருளைச் சந்தேகமில்லாமல் கொள்ளையிடலாம்'

மனு: 2 417.

'பிராமணன்பொருளை அபகரித்த சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்லவேண்டும். ஆனால் பிராமணன் சூத்திரனுடைய பொருளைத் தன்