திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
௧௫௩
பறையன் சாட்சியை அரசன் ஏற்றுக்கொள்ளக்கூடாது'
மனு: 8 66.
'பிராமணன் பால்காரன், வணிகன், மிட்டாய் விற்கிறவன், சிற்பி,பாடகன், ஏவலன் -ஆகிய இவர்களுள் ஒருவனாக இருந்தால்அவனைச் சூத்திரனாக மதிக்க வேண்டும்'
மனு: 8 102
'பிராமணர்களைக் காப்பாற்றப் பொய் சொல்லலாம் அதற்காகப் பிராமணரல்லாதவனைக் கொன்றாலும் பாவமில்லை.'
மனு: 8 112, 143,
'பிராமணனைத் தவிரப் பிற மூன்று வர்ணத்தார்க்கும் தண்டனை தப்பாமல் கொடுக்கவேண்டும்'
மனு: 8 124.
'பிராமணனைத் திட்டினால் மற்ற மூன்று வர்ணத்தார்க்கும் அரசன் கட்டாயம் தண்டனை கொடுக்கவேண்டும்'
மனு: 267, 268, 270 272, 276,
'பிராமணனைக் கொடுமை செய்தவனுக்கும் கட்டாயம் பலவாறான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்'
மனு: 8 279, 281, 283, 314 316.
'பிராமணன் பசுக்களை அபகரித்தவனுக்குக் காலை வெட்ட வேண்டும்'
மனு: 8 328.
'பிராமணனைக் காப்பாற்ற ஒருவனைக் கொலை செய்தவனுக்கு அரசன் தண்டனை கொடுக்கக் கூடாது.
மனு: 8 349,
'சூத்திரன் மற்ற மூன்று வர்ணத்தாருடைய மனைவியரைப் புணர்ந்தால் அவனை உயிர் போகும் வரை தண்டிக்க வேண்டும்'
மனு: 8 359.
'கட்டுக் கடங்காமல் இஷ்டப்படி திரியும் பிராமணப் பெண்களைச் சூத்திரன் புணர்ந்தால் அவன் ஆண்குறியை அறுக்க வேண்டும் ஒருவனின் கட்டுக்குட்பட்ட பெண்களைப் புணர்ந்தால் அவனைத் துண்டுதுண்டாய் வெட்டி அவன் பொருளையெல்லாம் கொள்ளையிட வேண்டும்'