பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௧௪

முன்னுரை


வழியே தொட்டுக்காட்டிக் குட்டினார், நம் திருவள்ளுவர் பெருமான்!

பனையோலையையும் எழுத்தாணியையுங் கொண்டே, தாம் பெற்ற பட்டறிவுகளையும் வரலாற்றுமூலங்களையும் கொண்ட இலக்கியங்களை ஈன்றெடுத்த பண்டைய ஆற்றல் ஒள்ளியர்களாகிய நம் அருந்தமிழ்ப் புலவர்கள் - தாம் பதித்த எழுத்துருக்களை இயன்ற அளவில் உருச்சுருக்கமாகவே யாத்தளிப்பாராயினர்! அவற்றிற் பெரும்பான்மையையும் பாவடிவங்களாகவே படைப்பாராயினர்! பாக்களை இடைவைத்த குறிப்பு உரை - பாக்களேயின்றி அமையும் கிளவியுரை பொருள்மரபில்லாப் பொய்ம்மொழியுரை - பொருளொடு புணர்ந்த நகைமொழியுரை ஆகியவாறான நான்முறை உரைவகைகள் (தொல். பொருள். 8: 166) உரையாட்டு வகையிலும், காண்டிகை, உரை என்னும் இருவகையினவான மரபுவழிப்பட்ட சிறப்பு உரைமுறைகள் நூல் விளக்கவுரை வகையிலும் ( தொல். பொருள்: 9: 103, 105) தொல்காப்பியர் காலத்திலும் - அதற்கும் முன்னிடாகவும் பயின்று வந்த பழைமையனவேனும் - அன்றிருந்த பாப்பெருக்க அளவின் முன்னர். அவை அளவில் மிகக் குறைந்தனவாகவே குன்றியிருந்தன!

பிறமொழி ஒன்றிலமைந்திருந்த அரிய செய்திகளை - கருத்துகளை முறைப்பெற மொழிபெயர்க்கும் அருவினை கூட அன்றைய தமிழகத்தில் ஆர்ந்த வழக்கமே! (காண்க. “மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல்” (தொல். பொருள் - மரபியல்: 99: 1-2). எனினும் - அன்றைய பாவிளைவுகளின் பரப்பெதிரில் - இவற்றின் விளைவு குற்றளவினதாகவே நிற்றலுற்றது! பின், அற்றை அவ்விளைவெலாம் முற்றும் இற்றும் அற்றும், இற்றைக்கு ஒற்றைப்பதிவேடும் உற்றிலோமாயினோம்! . . . . .

எழுதுபொருள் வசதிப்பாட்டுக் குறையே அன்றைய உரைநலக் கொழுமைகள் நிறைவளவிற் பதிவெய்தாக்குறைக்கு ஒரு பெருங் காரணமாயிற்று! இது காரணமாகச் சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் செந்திறப்போக்கும் அன்றைய நம் கல்விமுறையில் வளர்ந்து செழிப்புறுவதாயிற்று! இலக்கிய வெளிப்பாட்டிலும் இலக்கண வரையறுப்பாக்கத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய இலக்கணப்போக்குகளாகவே “சுருங்கச்சொல்லல்”; “விளங்கவைத்தல்” ஆகியன இலங்கின!

உரையாக மொழிவதைக்கூட, - சுருக்கமாகவே - அதுவும் சில