பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௫௮

முன்னுரை 


நாடிடும் நோக்குடனும், நன்மை தீமை இரண்டையும் சீர்தூக்கிப் பார்க்கும் திறத்துடனும், ஒருவர்க்கு ஏற்றமும் மற்றவர்க்குத் தாழ்ச்சியும் வராத எச்சரிக்கையுடனும், ஆராயும் அறிவுடனும், ஒருபுறம் கோடாத செங்கோன்மையுடனும், நல்ல குடிகளைக் காக்கவும் அல்லகுடிகளைத் தண்டிக்கவும் ஆன உரத்துடனும், கொடுங்கோன்மை தவிர்த்தும், நேர்மை அறத்துடனும் ஒவ்வொரு நிலையிலும் தவறு நேர்ந்துவிடாத செம்மை அறத்துடனும், சிறியவர் பெரியவர், இவ்வினத்தைச் சார்ந்தவர் அவ்வினத்தைச் சார்ந்தவர் என்று எண்ணாத சாதி, மத நோக்கற்றவனாகவும், அறிவு நிலையை மட்டும் பார்க்கின்ற மேலான உணர்வுடனும் நடந்து அறத்தை நீதியைக் காத்தல் வேண்டும் என்று கூறப் பெற்றுள்ளன என்பதை அறிவினார் கண்டுகொள்ளல் வேண்டும்.

இவ்வாறு அரசியல், சட்டம், தண்டனை என்னும் ஆளுமை நெறிகள் அனைத்திலுமே, திருவள்ளுவர் கூறுகிறன்ற தமிழியல் நெறிகள் அற்றைத் தமிழகத்தில் வழிவழியாக இருந்து வந்த அறமுறைகளேயன்றி, அக்கால் இடைநுழைந்த ஆரியவியல் கொடுநெறிகளோ, வர்ணாச்சிரமத் தர்மவியல் கோட்பாடுகளோ அல்ல என்பதைத் தமிழினத்தினார் உறுதியாக அறிந்துகொள்க. அவ்வுண்மையைக் கீழ்வரும் கழக இல்கியச் சான்றுகள் சிலவற்றாலும் உறுதி செய்துகொள்க இடமஞ்சி விரிவாகத் தரப்பெறவில்லை.

'உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற
ஏம முரசு இழுமென முழுங்க
நேமி உய்த்த நேய நெஞ்சின்
தவிரா ஈகைக் கவுரியர்' (பாண்டியர்)
- புறம்: 3:1 - 5.
'அறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எம்கோ'
- புறம்: 9:6 - 8.
'நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி'
- புறம்: 10:3 - 4.
'தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலாவெல்லை
குன்றுமலை காடுநாடு