பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௫௯


ஒன்றுபட்டு வழிமொழியக்
கொடிதுகடிந்து கோல்நிறுத்திப்
படுவதுண்டு பகலாற்றி
இனிதுருண்ட சுடர்நேமி
முழுதாண்டோர் வழிகாவல'
- புறம் 17; 1- 8.

வேற்றுமை யில்லா விழுத்தினைப் பிறந்து
வீற்றிருந்தோர்'
- புறம்: 27, 3 - 4.

(விழுத்திணை - சிறந்தகுடி, வீற்றிருந்தோர் - அரசாண்டோர்)

'அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவேண்டு பொழுதில் பதன்எளியோர் ஈண்டு
உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோரே!
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குத்
தண்பொர விளங்கும் நின் விண்பொரு வியன்குடை'

- -புறம் 35; 14 -19.

(கொண்மூ - மழைமேகம்)

'புறவின் அல்லல் சொல்லிய கறையடி (களைய)

யானை வான்மருப்பு எறிந்த வெண்கடைக்

கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக

- - மனு: 39, 1 - 3.

(துலாஅம் - - தராசு)
'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால், நமரெனக் கோல் கோடாது
பிறரெனக் குணம் கொல்லாது
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்
திங்கள் அன்ன தண்பெரும் சாயலும்
வானத் தன்ன வண்மையும் மூன்றும்
உடையை'

- புறம் 55-10 - 6.