பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௬௧


---புறம்: 182; 5 - 6.

'வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பா லவனும் அவன்கட் படுமே'

---புறம்: 183: 8 - 10.

'நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்
அதனால் யான் உயிர் என்ப தறிகை
வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே'

---புறம்: 186; 1 - 4,

வெண்குடை நிழற்றிய ஒருமையோர்

---புறம்: 189: 2.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்’
.............................
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

---புறம்: 192; 1,-12 - 13.

'படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்
இன்னா தம்ம வுலகம்
இனிய காண்கிதன் இயல்புணர்ந் தோரே'
---புறம்: 194: 5 - 7.

வேறுபாடுகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் உடைய இவ்வுலகைப் படைத் தவனாகக் கூறப்பெறும் நான்முகன் (பிரமன் பண்பில்லாதவன் என்னும் குறிப்பு இங்குக் கவனிக்கத் தக்கது. அத்துடன் -

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர் -997.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் –1062.

-ஆகிய இருகுறள்களும்கூட இங்குக் கவனிக்கத் தக்கன.

முதல் குறளில், அறிவுள்ளவர் என்பதற்காகவே ஒருவர் மதிக்கப்பெறார்; அவர் மக்கட்குரிய பொதுமைப் பண்பு உள்ளவராகவும் இருத்தல் வேண்டும் . - என்பதையும்,

அடுத்த குறளில், ஏற்றத் தாழ்வுள்ள இவ் வுலகைப் படைத்தவனாகச்