௧௬௨
முன்னுரை
சொல்லப் பெறும் நான்முகன் ஒழிந்து போகட்டும்'. என்னும் குறிப்பையும் உணர்க) (. இதே பொருளில் உள்ள கீழ்வரும் நற்றிணைச் செய்யுளடியும் கவனிக்கத் தக்கது)
-- நற்: 240: 1. (- இப் பாடலடியிலும், உலகைப் படைத்தவனெனக் கருதப் பெறும் நான்முகன் முறையற்ற (நீதியற்ற) செயல் உடையவன் என்னும் குறிப்பு உணரத் தக்கது.)
'சீறூர் மன்னர் ஆயினும் எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பினாரே'
-- புறம்: 197-13 - 14.
'பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்
....... ........................................................................................
முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வெளவல்’
- கலி: 133; 8, 13.
--எனும் கலித்தொகைச் செய்யுளடிகளும் இணைத்து நோக்கத் தக்கன.)
'ஈயென இரத்தல் இழிந்தன்(று) அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்(று) அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று'
- புறம்: 204 - A,
'முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்று ஈதல் யாம்வேண் டலமே'
- புறம்: 205; 1 - 2
'நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே'
-புறம்: 312, 4
'மறம்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம்கெட அறியா தாங்கு'
-நற்: 400, 7 - 8
'வாழிஆதன் வாழி,அவினி