பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௬௩


அரசுமுறை செய்க! களவுஇல் லாகுக'

--ஐங்: 8, 1 - 2

'நன்றுபெரிது சிறக்க!தீதுஇல் லாகுக'

--ஐங்: 9 - 2

'அறம்புரி செங்கோல் மன்னனின் தாம்நனி
சிறந்தன போலும்'

-- ஐங்: 290; 1 - 2.

'அறம் சாலியரோ அறம் சாலியரோ!
வறன்உண் டாயினும் அறம் சாலியரோ!

--ஐங312, 1 - 2 .

'கடலக வரைப்பின்இப் பொழில் முழு தாண்டதின்
முன்தினை முதல்வர் போல நின்றுநீ
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவாஅளி யரோஇவ் வுலகமோடு உடனே'

-- பதிற்: 14:-19 - 22.

'கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும்
வளம்பல பிறவும் நனந்தலை நன்னாட்டு
விழவுஅறுபு அறியா முழவுஇமிழ் மூதூர்
கொடிநிழற் பட்ட பொன்னுடை நியமத்து
சீர்பெறு கலிமகிழ் இயம்பும் முரசின்
வயவர் வேந்தே'

-- பதிற் 15. 16 - 21.

'ஞாயிறு புகன்ற தீதுதிர் சிறப்பின்
அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇ
கடுங்கால் கொட்கும் நன்பெரும் பரப்பின
விசும்புதோய் வெண்குடை நுவலும்
பசும்பூண் மார்ப! பாடினி வேந்தே!'

-- பதிற்: 17:-10 - 14

'மன்னுடை ஞாலம் புரவுஎதிர் கொண்ட
தண்ணியல் எழிலி தலையாது மாறி
மாரி பொய்க்குவ தாயினும்
சேரலாதன் பொய்யலன் நசையே!