பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௬௫


எல்லா ருள்ளும் நின் நல்லிசை மிகுமே!

--- பதிற்: 38; 1 - 2

'கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆக
தென்னம் குமரியொடு ஆயிடை அரசர்
முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழ
சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த
போர்அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!'

--- பதிர்: 43; 6 — 11.

'பாடுநர்,
கொளக் கொளக் குறையாச் செல்வத்துச்
செற்றோர்,
கொலக் கொலக் குறையாத் தானை, சான்றோர்
வண்மையும் செம்மையும் சால்பும் மறனும்
புகன்று புகழ்ந்து அசையா நல்லிசை
நிலந்திரு திருவின் நெடியோய்'

--- பதிற்: 82:-12 - 16.

'அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய
மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின்
உவலை கூராக் கவலைஇல் நெஞ்சின்
நனவில் பாடிய நல்லிசை'

-- பதிற்: 85; 9 - 12.

'பல்வேல் இரும்பொறை! நின்கோல் செம்மையின்
நாளின் நாளின் நாடுதொழுது ஏத்த
உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ
அரசியல் பிழையாது தோன்றி
நோயிலை ஆகியர் நீயே'

---பதிற்; 89; 9 - 13.

'தொன்று மொழிந்து தொழில் கேட்ப
அகல் வையத்துப் பகல் ஆற்றி
மாயாப் பல்புகழ் வியல்விசும்பு ஊர்தர
வாள்வலி யுறுத்துச் செம்மை பூஉண்டு
அறன் வாழ்த்த நற்குஆண்ட