பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௬௬

முன்னுரை 


விறல் மாந்தரன் விறல் மருக!
ஈரம் உடைமையின் நீர்ஓர் அனையை
அளப்பு அருமையின் இருவிசும்பு அனையை
கொளக்குறை படாமையின் முந்நீர் அனையை
பன்மீன் நாப்பண் திங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை'

--- பதிற்; 90; 8 - 18,

"ஓர்வுற்று ஒருதிறம் ஒல்காத நேர்கோல்
அறம்பு நெஞ்சத்தவன்'

-- கலி: 42 -13 - - 14

'நீண்டுநீர் மிசைத்தோன்றி இருள்சீக்கும் சுடரேபோல்
வேண்டாதார் நெஞ்சுஉட்க வெருவந்த கொடுமையும்
காண்டகு மதியென்னக் கதிர்விடு தண்மையும்
மாண்டநின் ஒழுக்கத்தால் மறுவின்றி வியன்ஞாலத்து
யாண்டோரும் தொழுதுஏத்தும் இரங்குஇசை முரசினாய்'

--- கலி: 100; 1 - 6

'முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வெளவல்’

--- கலி: 133; 13.

'மறப்போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை'

--- அகம்: 27, 8 - 9.

'ஆரங் கண்ணி அருபோர்ச் சோழர்
அறங்கெழு நல்லவை உறந்தை'

--- அகம்: 93 4 - 5

"குன்று.ஒங்கு வைப்பின் நாடுமீக் கூறும்
மறங்கெழு தானை அரசருள்ளும்
அறம்கடைப் பிடத்த செங்கோ லுடன்அவர்
மறம்சாய்த் தெழுந்த வலன்உயர் திணிதோள்
பலர்புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன்'

--- அகம்: 328; 1 - 5.

'முறைவேண்டு நர்க்கும் குறைவேண்டு நர்க்கும்
வேண்டுப வேண்டுப வேண்டியார்க்கு அருளி'

--- பெரும்பாண். 443444

அறமகூறு அவையம்'