௧௭௦
முன்னுரை
மனு: 10 95
'பிராமணன் திருடிவந்து யாகம் செய்தால், அரசன் அவனைத் தண்டிக்கக் கூடாது. அரசனின் மூடத்தனத்தாலேயே பிராமணன் பசித்துக் கிடக்க வேண்டியுள்ளது.
மனு: II 21.
ஏழையாய் உள்ள பிராமணனுக்கு அரசன் தன் அரண்மனைப் பொருளைத் தந்து அவனை வாழச் செய்ய வேண்டும்
மனு: 11 22, 23.
'பிராமணன் பொருளை அபகரித்த பாபி மறுபிறப்பில் கழுகு தின்ற மீதி மாம்சத்தைக் கொண்டு பிழைக்க வேண்டியுள்ளது:
மனு: 11 26,
'பிராமணன் தனக்குக் கெடுதல் செய்தவர்களைத் தானே தண்டிக்கலாம். அரசனிடம் அறிவிக்க வேண்டியதில்லை'
மனு: 11 31 33
'பிராமணனைக் கொல்வது, சுராபானம், பொன் திருடுவது, குருமனைவியைச் சேர்தல் இவை மகாபாவங்கள்
மனு: 11 54
'அரசனிடத்தில் பிராமணரீஊஒத் தீகஒ வரும்படி கோள் சொல்லுதலும் பிரம்ம அத்தியே’
-- மனு: 11 -5
'முனிவர்கள் பாவம் செய்தாலும் தம் தவ வலிமையால் அதன் கெடுதல் வராமல் காத்துக் கொள்கிறார்கள்
மனு: 11 241
இனி, இவை பற்றி இன்னும் விரிவாக எடுத்துக் காட்டுவது தேவையற்றது. அவை நீண்டு கொண்டே போகுமாகையால் இப் பகுதியை இத்துடன் நிறுத்திக் கொண்டு ஆரியவியலில் கூறப்பெற்றுள்ள பெண்ணியல் கொடுமைகளைப் பற்றிச் சிறிது காணலாம்.
பொதுவாகவே ஆரியவியல் கோட்பாடுகளின் பெண்கள் மிகவும் அடக்கியொடுக்கப்படும் கொடுமைப்படுத்தப்படும் செய்திகள் எல்லாம் மிகப்பரவலாகக் காணப்பெறுகின்றன. இன்றைக்கும் இந்தியாவில் பெண்ணினம் முன்னேறாமைக்கும், தாழ்ச்சியாகவும் இழிவாகவும் நடத்தப் படுவதற்கும் ஆரியரின் தர்மவியல் கொள்கையும் ஆயிரக்கணக்கான புராண, இதிகாசக் கதைகளுமே தலையாய காரணங்கள் எனக் கூறினால், அதில்