பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௭௩


- மனு 9-4

மனுநூல் அதிகாரங்கள் 9, 10 ஆகியவற்றுள் பெண்களைப் பற்றிக் குறிப்பிடும் மொத்தக் கருத்துகளும் இங்குத் தனித் தனியாக எடுத்துக் கூறப்பெறாமல், அவற்றின் விரிவை அஞ்சித் தொகுத்துத் தரப்பெறுகின்றன. இவற்றினின்று ஆரியவியலில் பெண்களை மதிப்பிடும் தன்மைகளை நன்கு உணர்ந்துகொள்க. இன்று வரை பெண்களை அடிமைப்படுத்தியும், அவர்களுக்கு எவ்வகையான வாழ்வுரிமையும் தராமலும், அவர்களைக் கொடுமைப்படுத்தியும் வருகின்ற நிலைகள் அனைத்திற்கும் இவ்வாரிய வர்ணாச்சிரமக் கொள்கைகளும் கோட்பாடுகளும் நடைமுறைகளுமே காரணம் அன்றித் தமிழியல் அறக் கோட்பாடுகள் அல்ல என்பதை அனைவரும் உணர்தல் வேண்டும். ஆரியர் வருகைக்குப் பின்னர்தான், இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் பெண்களைத் தாழ்த்தி வைக்கும் ஆடவர் மேலாளுமை (ஆதிக்க) உணர்வு தோன்றிய தென்னும் உண்மையையும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இவ்வுண்மையறியாத சிலர், சில பெண்கள் விடுதலை இயக்கங்கள் உட்பபட, திருக்குறளிலும், ஆணாளுமை கூறப்பெற்றிருப்பதாகக் கூறி வருவது, அவர்களின் அறியாமையையும் பேதைமையையுமே உணர்த்துவதன்றி, அவர்களின் பொதுமையறிவையும், ஆரிய வழக்குகளையும் தமிழியல் வழக்குகளையும் பிரித்துணரும் ஆற்றலையும், உணர்த்தா வென்க.

இனி, மனுநூலில் கூறப்பெற்ற ஆரியவியலின் பெண்ணடிமைக் கோட்பாடுகளைப் பார்வைக்கு வைக்கின்றோம்.

‘காமம், கோபம், பொய், துரோக எண்ணம், அலங்காரம், இருக்கை, படுக்கை - இவையனைத்தும் பெண்கள் காரணமாகவே தோற்றுவிக்கப்பட்டன.’

‘பெண்கள் அனைவரும் நிலையில்லாத மனம் கொண்டவர்களே, எப்பொழுதும் கற்பை இழக்கும் தன்மையினரே. இவை அவர்களின் பிறவியோடு வருபவை.’

‘அழகும், வயதும் பாராமல், ஆண்களிடத்து அவர்கள் எப்பொழுதும் கற்பிழந்து விடுவது அவர்களின் இயல்பு. அவர்களை நன்றாகப் பேணி வந்தாலும், கணவனின் கட்டுக் காவலை அவர்கள் விரும்புவதில்லை.’

‘இந்த வகையில் பெண்கள் அனைவரும் கற்பிழந்தவர்களே. கெடுமனம் உடையவர்களே. கூடாவொழுக்கத்திலிருந்து பெண்களைக் காப்பாற்றும் திறன் எந்த ஆணிடத்திலும் இல்லை. பெண்கள் கற்பில்லாதவர்கள் என்றே எல்லா நூல்களும் கூறுகின்றன.’

‘எனவே பெண்கள் பருவம் அடையும் முன்பேயே அவர்களை மணம் செய்து கொடுத்துவிட வேண்டும். அந்த வகையில் 24 வயதுள்ளவன் 8