பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௮௦

முன்னுரை 


'திரு' என்னும் சிறப்படை சேர்த்து இதனைத் திருமணம் என்றனர் என்க.

இனி, தமிழியலில் பெண்ணியற் கொள்கைகளும், கோட்பாடுகளும் எவ்வகையில் பெருமை சான்றன என்பதற்குத் தமிழிலக்கிய இலக்கண நூற்பரப்பினின்று ஒரு சில சான்றுகளைக் காட்டுவோம்.

'ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்
தாமே செல்லும் தாயர்'

---தொல், 983

வாய்மையும் பொய்ம்மையும் கண்டோர்ச் சுட்டித்
தாய்நிலை நோக்கித் தலைப் பெயர்த்துக் கொளினும்
நோய்மிகப் பெருகித்தன் நெஞ்சுகலுழ்ந் தோளை
அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி
வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தோடு
என்றிவை யெல்லாம் இயல்புற நாடின்
ஒன்றித் தோன்றும் தோழி

---தொல் :985.

'காமம் சாலா இளமை யோள்வயின்
ஏமம் சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து'

---தொல் 996.

'மக்கள் நுதலிய அகன்ஐந் திணை

---தொல்: 1000

'இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை'

---தொல் 1038

'காமக் கூட்டம் காணும் காலை
மறையோர் தேயத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ் துணைமையோர் இயல்பே'

---தொல்: 1038

ஒன்றே வேறு என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோன் ஆயினும் கடிவரை யின்றே