பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௮௧


---தொல் 1039

(அன்பு, கல்வி, பொருள், எழில், அகவை முதலியவற்றுள் ஒத்துள்ள இளைஞனும் இளைஞையும் இவருள் தலைவன் தன்மையில் மிகுந்தவனாயினும் அம் மணம் கடியப்படுதல் இல்லை)

'பெருமையும் உரனும் ஆடூஉ மேன'
---தொல்:1044

பெருமை :

'ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு' -974

- இங்கு ஆணுக்கும் கற்பு வலியுறுத்தப் பெறுகிறது எண்ணி மகிழ்க)

'அச்சமும் நானும் மடனும்முந் துறுத்த
நிச்சமும் பெண்பாற் குரியன என்ப'

---தொல் 1045

(அச்சம் - அஞ்சுவது அஞ்சல் (4-28); நாணம் - முதுவரிடமும் புதுவரி டமும் அமைந்து பழகுதல் திருதுதல் நல்லவர் நாணு (1011), மடன் - மடங்கியிருத்தல், அறிந்து அறியார்ப்போல் இருத்தல், துடுக்குற வாய்வாளாமை நிச்சம் - எப்பொழுதும், நித்தமும் இவற்றொடு உலக வழக்காய பயிர்ப்பு என்பதொரு குணம் எண்ணப்பெறாதது உணர்க. அஃது ஆரிய வழக்காதலின் என்னை? பயிர்ப்பு என்பது அருவருப்புணர்வு அஃதாவது, கணவனன்றிப் பிறர் தன்னைத் தொடும்பொழுது, பெண்ணுக்கு ஏற்பட வேண்டிய அருவருப் புணர்வாக இது கருதப் பெறுகிறது. பழந்தமிழ் நூல்களில் இவ்வுணர்வு தமிழியல் சார்ந்ததாகக் காண்ழ்பெறவில்லை. எனவே இஃது ஆரியவியலென்று ஒதுக்குக. இஃதொரு பெண்ணடிமை உணர்வே என்பது தண்டமிழ்ச் சான்றோர் முடிபாகலாம்)

'நானும் மடனும் பெண்மைய
---தொல் 1054-2

'உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந் தன்றெனத்
தொல்லார் கிளவி புல்லிய நெஞ்சமொடு'

---தொல் 1059

'கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்