பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௮௩


ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே'

---தொல் 1138

(இதிலும், தலைவனும் தலைவியும், தம் வாணாள் இறுதிக் காலத்து ஒப்ப இணைந்து, சிறந்ததாகிய பொதுவறமோ, அல்லது தவமோ செய்து வாழ்வுப் பயன் காணுதல் கூறப் பெற்றது காண்க. இங்கும் சம உரிமை பெண்டிர்க்குத் தருகின்ற தமிழியல் மரபு நிலையை உணர்க. ஆரியவியலில் பெண்டிர்க்குத் தவவொழுக்கமும் பொதுத் தொண்டில் ஈடுபடுதலும் தவிர்க்கப் பெற்றன என்க)

'செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பால் ஆன,

---தொல் 1155

தேரும் யானையும் குதிரையும் பிறவும்
ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப,

---தொல் 1158

(இதில் தலைவன், தலைவி இருவரும் தேரிலும், யானை, குதிரை மேலும் ஊர்ந்து செல்வதற்கு உரியர் என்றது, இருபாலார்க்கும் சமநிலை தெரிவித்தது)

'முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச் சொல்
நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே'

---தொல் 1166

இதில், கணவன், மனைவி இருவரும் அல்லது ஆண் பெண் இருவரும் ஒருவர்க்கொருவர் பெயர் சுட்டி அழைத்துக் கொள்ளுதல், 'எல்லா' என்பது போலும் பொது விளிச் சொல் கூறி, பேசி, அழைத்தல், இவை போலும் பிற உரிமைச் சொற்களை மரபு வழிப் பயன்படுத்திக் கொள்ளுதல் இருவர்க்கும் உரிய என்பதால், ஆண், பெண், வேறுபாடின்றி இயங்குதல் வழக்கிலிருந்தமை உணர்க.

இங்கு எல்லா என்னும் தமிழ் அழைப்புச் சொல்லே, ஆங்கிலர் வழக்கி லும், பிறமொழியினர் வழக்கிலும் Hellow-ஹலோ - எனும் ஆண், பெண் இருவரும் அழைத்துக் கொள்ளும் பொது அழைப்புச் சொல்லாகப்