பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௮௭


- 45

'அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று'

- 49

என்ற வகையில், புறச் சிறப்பாகவும்,

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்

- 52

இல்லதென் இல்லவள் மாண்பானாள் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

- 53

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை

- 59

- என்ற வகையில் அகச்சிறப்பாகவும் எடுத்துக் கூறினார், என்க. இனி, இவை போலும் இவற்றையொட்டிய கருத்துகளையே முழுமையாக இல்வாழ் க்கை, வாழ்க்கைத் துணை நலம் என்னும் அதிகாரங்களிலும் திருமணம் ஆன ஆணும், பெண்ணும் பிற குடும்பங்களுடன் பழகுகையில் இருக்க வேண்டிய எச்சரிக்கையைப் 'பிறனில் விழையாமை' அதிகாரத்தும் அடக்கினார்.

இவ்வுலகில் பிறந்த ஒவ்வோர் ஆணுக்கும், பெண்ணுக்கும் உடலியல், மனவியல், உயிரியல், வாழ்வியல் கோட்பாடுகளின்படி, இல்லற வாழ்க் கையே இங்குள்ள அனைத்தினும், மிகு தேவையானதும், இன்றியமையாததும், அனைத்துத் துய்ப்புகளுக்கும், தொண்டறத்திற்கும் தொடக்கமும் முடிவும் ஆகும் என்பதை வலியுறுத்துவான் வேண்டி

'இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை’

- 47

என்றும்

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாளின் நோன்மை உடைத்து