பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௮௮

முன்னுரை 


- 48


என்றும்

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை

-49


என்றும்,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

- 50


என்றும்,

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்

– 46


என்றும், பலபடியாக, உலக வாழ்க்கைக்கே இல்லறம்தான் சிறப்புடையது, முகாமையானது, உயர்ந்தது, பொருந்துவது, தவிர்க்கக் கூடாதது, அனைத்து முயற்சிகளுக்கும் மூலமானது, நிறைவுடையது என்றவாறு கூறினார் என்க. இவற்றுள் கூறப் பெற்ற முயல்வார், நோற்பார் என்னும் இரு சொற் களுக்கும், பரிமேலழகர் முதலிய உரையாசிரியர் பலரும், துறந்தார், தவம் செய்வார் என்றே பொருள் தந்தாராயினும் அவற்றுக்கு இவ்வுலகின் அனைத்துக் கோட்பாடுகளிலும் முயற்சிகளை உடையவர் முயல்வார்) என்பதும், அக்கோட்பாடுகளும் கொள்கைகளும் வெற்றிபெற அவற்றிலேயே நோக்கமுடையவராக நோற்பாராக இருப்பவர் என்பதும் ஆன பொருள் களும் உண்டு என்றும் கருதுக.

இனி, மேலே உள்ள் குறட்பாக்களுள் வரும், அன்பு, அறன், பண்பு, பயின் 45) பழிப்பது 49), மாட்சி (52),மாண்பு (33), புகழ்புரிதல் (59)என்னும் சொற்களையும் நாம் நுணுகிக் காணுதல் வேண்டும்.

- இங்கு அன்பு என்பது கணவன், மனைவி இருவர்க்கும், ஒருவர் பால் ஒருவர்க்குள்ள பற்றுடைமை, நலம் கருதுதல், ஈடுபாடு, தன்னிழப்பு ஆர்வமுடைமை, அக்கறையுடைமை, கவனிப்பு, காப்பு, பேணுதல், புரத்தல் முதலிய அத்தனை மனவுணர்வுகளையும் குறிப்பது.
அவ்வாறே அறம் என்பதும், இருவர் மாட்டும் நிகழும் புறவொழுக்கம், பொதுநலவுணர்வு, குடிமை பேணுதல், மாந்த நேயம், இன, நாட்டுக் கடமை - முதலிய அத்தனைச் செயலுணர்வுகளையும்