பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௯௩


வற்புறுத்தப்பெறும் நிலை என்பது வேறு.

தமிழியல் கற்பு என்பது, தன்னைத்தானே கொண்டு ஒழுகுதல், இயல்பானது குடும்ப நிலையிலேயே மரபுவழி கற்பிக்கப்பெறும் பின்னணி உடையது. திருக்குறளில் சொல்லப்பெற்ற

'நிறைகாக்கும் காப்பே தலை' - 57.

'தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு' - 974,

'நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்' - 154.

'நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்' - 1025.

'செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்' - 1039.

'நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்' - 1254.

என்னும் குறட்பாக்களை ஓர்க,

இவற்றுடன், பிற கழகத் தமிழிலக்கியங்களில் கற்பெனும் திண்மை உறுதி - வலியுறுத்தப்பெறும் சிற்சில இடங்களையும் இங்குக் காண்க

'மாசில் கற்பின் மடவோள்' - நற் 15:7

'முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள்' - நற் : 142:10

'நன்றி சான்ற கற்பொடு' - நற் 330:10

‘கடவுள் கற்பின் அவர் எதிர் பேணி' - குறுந் : 252.4

'அடங்கிய கற்பின் நலம்கேழ் அரிவை'. குறுந் 338:7

'அருந்ததி அனைய கற்பின்' - ஐங்: 442:4

'ஆறிய கற்பின் அடங்கிய சாயல்' - பதிற் 16:10

'அறஞ்சால் கற்பின் ஒண்ணுதல்' - பதிற் 31:24

'உலகந் தாங்கிய மேம்படு கற்பின்' - பதிற் 59:8

'காமர் கடவுளும் ஆளும் கற்பின் .... நறுநுதல்'

- பதிற் : 65:9

பெண்மை சான்று பெருமடம் நிலைஇக்