பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௯௫


'வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள்' --கலி 2.22

'இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்' --கலி: 9.22

இனி, ஆரியவியலில் கூறப்பெறும் கற்பு என்பது, கணவன் குடும்பத்தில் உள்ளார் அனைவரும், பெண்ணை அடக்கி ஆண்டு, ஒடுக்கி உடல்வருத்திச் சொல்லாலும் செயலாலும் தாக்கிக் கொடுமை செய்து, நிறையழியாமல் நிற்கச் செய்வதாம் ஒரு வன்முறை சான்றதாகும் என்க. இவற்றை முன் காட்டிய மனுநூல் சான்றுகளில் தெளிந்து கொள்க.

இனி, இவற்றை மேலும் விளக்கின் மிக விரியும் ஆகலின் இதனை இத்துடன் நிறுத்தி மேலே செல்வாம்.

அடுத்து, பெண்ணடிமைக் கருத்து எனக் கருதும் கொழுநன் தொழுது எழுதல் (55) என்னும் குறளியக் கூற்றைச் சிறிது விரிவாகப் பார்ப்போம்.

தொழுதல் என்பது மனத்தால் நினைந்து வேண்டி வணங்குதல்.
'கொழுநன் கொள் என்னும் வேரடியாகப் பிறந்த சொல், தன்னைக் கொண்டவன். அதாவது தன்னை அன்பாலும் அறத்தாலும் பண்பாலும் பயனாலும் (45) மனைவியாக ஏற்றுக்கொண்டு வாழ்வளிப்பவன்.

'கணவன்' என்னும் சொல் தன்னைக் கூடுதற்கு உரியவன் என்று பொருள் தரும் கணம்-கூட்டம், கண-கூடுதல், சேர்தல், இணைதல்,

'கூடுதற்கு உரியவன்' என்று பொருள் தரும் சொல்லாகிய கணவன் என்னும் சொல்லே, கழக இலக்கியங்களுள் மிகப் பரவலாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளது. இது உடலியல் தழுவிய சொல்லாதலின், இது முதுதமிழ் மாந்தவினத்தின் முதல் தோற்றச் சொல்லாக இருந்திருத்தல் வேண்டும்.

'கொழுநன்' என்னும் சொல், உளமும், அறிவும் உரிமையும் கலந்த சொல்லாதலின், தமிழ மக்களிடை நாகரிகம் வளர்ந்து பண்பாடு தோன்றிய பின் உருவாகிய சொல்லாதல் வேண்டும்:

இவ்விரு சொற்கள் தவிர, தலைவன்என்னும் சொல்லும் கிழவன், கிழவோன் என்னும சொற்களும், பொருளுடைமைக் குமுகாயம் தோன்றிய பின்னர்த் தோன்றிய சொற்களாக இருத்தல் வேண்டும். ஏனெனில் தலைவன் என்பது குடும்ப அல்லது இல்லற ஆளுமை முதல்வன் என்னும் பொரு வரிலும், கிழவன் கிழவோன் என்பது பெண்ணுக்கும், அவள் வாழ்வுக்கும் உரியவன் என்னும் பொருளிலும் வருகின்றன. கிழமை-உரிமை இம் மூன்று சொற்களுமே கணவன் என்னும் சொல்லுக்கு அடுத்தபடி கழக இலக்கியங்களில் மிகுதியாக ஆளப்பெற்றுள்ளன. அதிலும் கிழவோன், கிழவன்