பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ககூகூ

முன்னுரை


என்னும் சொற்கள் மிகவும் அதிகமாகவே ஆளப்பெறுகின்றன. இவ்வனைத்துச் சொற்களுமே தமிழும், தமிழினமும் மிகமிகப் பழமை வாய்ந்தன என்பதைத் தெளிவாகக் காட்டுவனவாம். என்க. ஆனால், கொழுநன் என்னும் அன்பும் அறிவும் இணைந்த பண்பியல் சொல் கழக இலக்கியங்களில் குறைவாகவே ஆளப்பெற்றுள்ளது சிந்திக்கத் தக்கது. இச்சொல் முன்னவற்றுக்குப் பிந்திய சொல்லாக இருக்கலாம்.

ஆனால் திருக்குறளில், கணவன், 'கூட்டத்துக்குரியவன், தலைவன் (குடும்பத் தலைமை தாங்குபவன்) என்னும் இரு சொற்களுமே ஆளப் பெறவில்லை.

இனி, கொழுநன் (55) கிழவன் 039, கொண்கண் (1186, 1265, 1266,1283, 1285)என்னும் மூன்று சொற்களையே திருவள்ளுவர் கணவனைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். அதுவும் முதல் இரண்டு சொற்களையும் ஒவ்வொரு முறையும் பின் ஒரு சொல்லை மட்டும் ஐந்து முறையும் பயன்படுத்தியுள்ளார்.

இவற்றுள், கிழவன் என்பதை நிலத்துக்குரியவன் என்னும் பொருளிலேயே பயன்படுத்தியுள்ளார். அது,

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லானின் ஊடிவிடும் - 103

என்பது. இதில்கூட நிலத்தை இல்லாளுக்கு இணையாகச் சொல்லுவதால், 'கிழவன் என்பதற்குக் கணவன் என்று ஒருபுடை உவமையாகப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

இனி, இதைத் தவிர்த்துப் பார்ப்பின், கணவனைக் குறிக்கப் பயன்படுத்திய கொழுநன் என்று வருவது மனைவி தொழுதெழும் எனும் கருத்துக் கூறும் அவ்வொரு (55) குறளிலேயே என்க. இனி, அவர் மிகுதியாக ஐந்துமுறைப் பயன்படுத்திய கொண்டான் என்னும் சொல்லையும், தன்னை மனைவி யாகக் கொண்டவன் என்னும் பொருள்தரும் படியே பயன்படுத்தியுள்ளார் என்பதையும் கவனித்தல் வேண்டும். கொண்டான் என்பதை இன்னும் ஒருபடி மேலே தற்கொண்டான் (56) என்றும் விரிவுபட விளக்கிப் பேசுவார். இதற்குப் பொருள் தன்னை அன்பாலும், மதிப்பாலும், உரிமையாலும், தான் பெருமைப்படும்படியும், இணையாகவும், சமநிலையாலும் தன்னை மனைவியாகக் கொண்டவன் என்பதே அவ்வாறு தன்னை மதியாதவனைத் தானும் பெருமையாக மதிக்க அல்லது கருத இயலதன்றோ? எனவே 'தன்னைக் கொண்டவன் என்னும் பொருளில் தற்கொண்டான் என்றார் என்க.

அடுத்து, இக் கொண்கண் என்னும் சொல்லும் கொண்டான் என்னும் சொல்லும் கழக இலக்கியங்களில் ஆளப்படுபவையே ஆயினும் இவர் விதந்துகூறிய தற்கொண்டான் என்னும் தொகைச் சொல் இவர் மட்டுமே