திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார்
ககூஎ
புதுவதாகப் புனைந்து கொண்ட சொல்லே என்க. இச் சொல்லாட்சி ஒன்றே திருவள்ளுவப் பேராசானின் பெண்ணியல் மதிப்பைத் தெளிவாகக் காட்டுவதாகும், என்க. தான் மட்டும் அவனைக் கணவன் என்று கொண் டால் போதாது. அவனும் தன்னை மனைவி என்று கொள்ள வேண்டும்; அவ்வாறு தன்னை மதிப்பவனையே கருதுபவனையே தானும் கணவனாக மதித்தல் வேண்டும் என்னும் பெண்ணியல் பெருமைக் கருத்தை சமவுரி மையைப் புலப்படுத்தும் கருத்தை, இவர் உணர்த்தும் பாங்கு மதித்துப் போற்றும் தன்மையது. இதனைப் பெண்ணுரிமை பேசும் அனைவரும் எண்ணிப் பார்த்தல் வேண்டும் என்க.
இனி, கொழுநன் தொழுதெழுதல் என்னும் கருத்துக்கு வருவோம்.
ஒன்றைத் தொழுதல் என்னும் மனவுணர்வுப் பழக்கம் பெரும்பாலும் மிகப் பழங்காலத்திலிருந்தே வருவது. இஃது முதலில் அச்சம் காரணமாகத் தோன்றிப் பின்னர் அன்பு, அடக்கம், தலைமை முதலிய உணர்வும் தேவையும் மிகுந்த நிலையில் வளர்ந்து, அதன் பின்னர்த் தெய்வம், கடவுள் ஆகிய நிலைக்கு வந்ததாகலாம்.
ஒருவரை ஒருவர் வணங்கிக் கொள்ளுதலும், பின் மிகுந்த மதிப்புடன் தொழுவதும் அடிமைத் தன்மை என்று கருதவியலாது. கதிரவனைத் தொழு தல், பிறையைத் தொழுதல், விண்மீன் தொழுதல், தெய்வம் தொழுதல், கடவுளைத் தொழுதல், அரசனைத் தொழுதல், பெற்றோரைத் தொழுதல், பெரியோரைத் தொழுத , குடும்ப முன்னோரைத் தொழுதல், குலத் தலைவனைத் தொழுதல், மறவரைத் தொழுதல், நடுகல் தொழுதல், ஆற்றைத் தொழுதல், பறவையைத் தொழுதல், பாம்பைத் தொழுதல், புற்றைத் தொழுதல், ஆ (பசு) வைத் தொழுதல், யானையைத் தொழுதல், விளக்கைத் தொழுதல், மரத்தைத் தொழுதல், பிணத்தைத் தொழுதல், புதைவிடத்தைத் தொழுதல், சிலையைத் தொழுதல் முதலிய பல்வேறு தொழுகைகள் பல்வேறு மக்களிடமும், படித்தவர் படியாதவர் அனைவரிடமும் உலகெங்கும் பரவியிருந்ததை இலக்கியங்களும் வரலாறுகளும் நமக்குச் சொல்லும், இவையெல்லாம் பல்வேறு அடிப்படையில் நிகழ்கின்றன. தெய்வங்களைத் தொழாதவர் தலைவர்களையும், தலைவர்தம் சிலைகளையும் படங்களையும் அவர்தம் புதைமேடைகளையும் தொழுது வருவதை நேரடியாகப் பார்க் கிறோம். தொழுதல் உணர்வை ஏதோ ஒரு வகையில் மதிப்பீடாகவோ, பின்பற்றுதலாகவோ, வழிபடுதலாகவோ, வழிபாடாகவோ தெரிந்தோ, தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, காரணம் கற்பித்தோ, கற்பியாமலோ ஒவ்வொருவரும் செய்து வருகிறோம். ஏதோ ஒரு வகையில் எதையோ ஒன்றை அல்லது எவரையோ ஒருவரை, ஒருவர் தொழாமல் இருப்பதென்பது அரிதே இவ்வாறு இப்பழக்கம் வழக்கமாகி, வழக்கம் வாழ்க்கையாகப் போய்