௨௦௬
முன்னுரை
தக்க பெரும் பதவிகளிலும்,அதிகாரப்பொறுப்புகளிலும், அரசாட்சி நிலைகளிலும் செல்வ நிலைகளிலும், மக்களை வழிநடத்தும் தலைமை நிலைகளிலும், இன்னும் பெயரும், புகழும் பெற்ற பெரிபோர்களாகவும், சான்றோர்களாகவும் கூட இருக்கலாம், ஆனாலும் அவர்களுக்கு இப்பெண்னின்ப ஈடுபாடு மிகுந்தே இருக்கும், இன்னுஞ் சொன்னால், அவர்களின் பொதுநிலை வாய்ப்புகளையும்கூட இதற்கென்று மிகுதியும் பயன்படுத்தித் தங்கள் விழைவு வேட்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவே செய்வர். இவர்களுக்கு இஃது இயற்கை, என்க.
இவ்வுலகியல் நிலை, மக்களிடம் பெரும்பாலார்க்கு உண்டு என்பது மக்கள் உடலியலறிஞரும், மக்கள் உளவியலறிஞரும் கூறும் உண்மையாகும், மேலும் உலகின் மிகப் பண்பட்ட இனமக்களிடமும்கூட இந்நிலைகள் மிகுதியும் உண்டென்பர், அறிஞர். நம் அரும் பெறல் பேராசான் திருவள்ளுவரும் இவர்கள் தம் மனைவியரிடமும் மட்டுமன்று, தம் குடும்பத்தொடர்புடைய பிறர் மனைவியரிடம்கூட இவ்வாறு நடந்து கொள்ளலாம் என்று கருதி, அவ்வொழுக்க மின்மையைக் கண்டிக்கும் வகையில், அவ் வாய் புகள் பெறுகின்ற நிலையில், சான்றோர்க்கும் உள்ள இவ்வுடலியல் சறுக்கலை யெண்ணியே, 'பிறனில் விழையாமை' அதிகாரத்துள்,
'பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றே ஆன்ற ஒழுக்கு'
- 148
'அறண் வரையாண் அல்ல செயினும் பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று'
- 150
'எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
144
- என்றும், துறவறவியலில் கூடாவொழுக்கம் என்னும் அதிகாரத்துள், துறவு நிலையில் உள்ள துறவியர்க்கும் கூறும் வகையில்,
வானுயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
தானறி குற்றப் படின்
- 272
'தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து வேட்டுவன்
புள் சிமிழ்த் தற்று.
-274
மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்'
- 278
- என்றும், இன்னும் சில இடங்களில் சிலவாறாகவும் மிகவும் மனம் நெகிழ்ந்து கூறிக் கடியலுற்றார் என்க.