பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௦௮

முன்னுரை 


பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நானாக நாணுத் தரும். - 902

என்று கூறுவதிலும், மனைவியின் உயர்ந்த பெண்மைத் தன்மைகளைப் போற்றிக் கொள்ளாமல், அவளை இழிந்த கழிகாம உணர்வுக்கு ஆட்படுத்தும் உடலுறவுக் கென்று கருதி ஈடுபடலைக் கண்டிக்கிற கருத்தே உள்ளதன்றி, அவளை இழிவாகக் கருதும் கருத்து எங்குள்ளது என்று ஆய்ந்து தெளிக இனி, இவையல்லாமல், அடுத்தடுத்து வரும் குறட்பாக்களிலும் வரும்,

'இல்லாள் கண் தாழ்ந்த இயல்பு' -903
'மனையாளை அஞ்சும் மறுமையிலாளன்' -904
'இல்லாளை அஞ்சுவான்' -905
'இல்லாள் அமையார் தோள் அஞ்சுபவர்' -906
'பெண்னேவல் செய்தொழுகும் ஆண்மை' -907

என வரும் கருத்தெல்லாம், பெண்ணை - தன் மனைவியை அவளின் உடலுறவு நோக்கம் ஒன்றே கருதி, அவளைத்தன் காம உணர்வுக் கழிவுக்கென்றே, அவள் அழகையும், வளப்பமான உடலுறுப்புகளையும் பயன்படுத்தி நுகர்ச்சி விரும்பும் நோக்கத்துடன், விரும்பும் ஒருவன், அவள் மீறிச் செய்யும் கட்டளைகளுக்கும், செயல்களுக்கும் அஞ்சி, இணங்கித் தன்னைத் தாழ்த்திக்கொண்டு நடக்கும் செயல்களைக் கண்டித்துக் கூறியனவேயன்றி, இயல்பாக, அவன் தன் மனைவியின் பால் கொள்ளும் பண்புள்ள அன்பையும் ஈடுபாட்டையும் கண்டித்து ஆகாதென்க. இவற்றிலும் பெண்மை மதிப்புக் கருத்துகளே உள்ளன என்பதை உற்றுணர்ந்து கொள்க.

இனி, இவைபோலவே, பிற குறட்பாக் கருத்துகளிலும் அவ்கைக் குறைபாடுகளோ, குற்றங்களோ சொல்லப் பெறாமல், பெண்மையைக் கணவன் மதித்தொழுக வேண்டிய கருத்துகளே, உடலியல், மனவியல், வினையியல் தொடர்பாகச் சொல்லப் பெற்றுள்ளன என்பதை, எம் நூலுரைக்கண், அவ்வதிகார விரிவு விளக்கங்களில் கண்டு தெளிக. இவற்றை இங்கு விரிப்பது மிகையும், தேவையின்மையும் ஆகும்.

இனி, அடுத்து வரும் வரைவின் மகளிர் பற்றியும் ஓரிரு கருத்துகளை முன்வைக்கும் தேவை கருதிச் சில சொல்வாம்.

முதலில், இவ்வதிகாரத் தலைப்பே, பெண்மையை அஃது இழிவுற்று இயங்கும் நிலையிலும், இழிவு படுத்தாத இயல்பின் அமைந்துள்ளது என்பதை உற்று நோக்குக. இதில் கூறப்பெறும் கருத்துகள் விலைமகளிர் பற்றியவை என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். விலைமகளிரின்