பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௧௬

முன்னுரை 


மெய்ப்படக் கிளந்த வகைய தாகி
ஈரைங் குற்றமும் இன்று நேரிதின்
முப்பத் திருவகை உத்தியொடு புணரின்
நூல்என மொழிய நுணங்குமொழிப் புலவர்

--- தொல் 1598.

இவ்வகையிலும், இதற்கு மேலும் உடைய, பொய்யாமொழிப் பொருளுடையதாகும் இந்நூல் என்பதற்கு ஐயமும் உண்டோ? அறவே இல்லை என்க. இனி, நூலின் தகைமை கூறும் பின்வரும் கூற்றுகளையும் ஊன்றிக் காண்க

"மேற்கிளந் தெடுத்த யாப்பின்உட் பொருளொடு
சில்வகை எழுத்தில் செய்யுட் டாகிச்
சொல்லும் காலை உரையகத் தடக்கி
நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத் தாகித்
துளக்கல் ஆகாத் துணைமை எய்தி
அளக்கல் ஆகா அரும்பொருட் டாகிப்
பல்வகை யானும் பயன்தெரி வுடையது
சூத்திரத்து இயல்பென யாத்தனர் புலவர்"

--- தொல்: 1600

(செய்யுட்டாகி-செய்யுள்களைக் கொண்டதாகி, துளக்கல் - வேறுபடவும் மாறுபடவும் உரைத்தல்; அரும்பொருட்டாகி - அரும்பொருள்கள் உடையதாகி,)

"விட்டுஅகல் வின்றி விரிவொடு பொருந்திச்
சுட்டிய சூத்திரம் முடித்தல் பொருட்டா
எது நடையினும் எடுத்துக் காட்டினும்
மேலாங்கு அமைந்த மெய்ந்நெறித் ததுவே"

--- தொல்: 1602

(விட்டகல்வு இன்றிதாம் எடுத்துக் கொண்ட பொருள் பற்றி, அதை விட்டு அகலா ஆகி; முடித்தல் பொருட்டா-பிறவிப் பயன் முழுவதும் எய்தி, இப்பிறவியை முழுவெற்றியா முடிப்பது காரணமாக ஏது நடையினும் காரண, கருமிய முடிவுகளொடு, மெய்ந்நெறித்து-மெய்யான மெய்ப்பொருள் கோட்பாடுகளைக் கொண்டு)

மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்த்
தன்னுர லாலும் முடிந்தநூ லானும்
ஐயமும் மருட்தையும் செவ்விதின் நீக்கித்
தெற்றென ஒருபொருள் ஒற்றுமை கொளீஇத் துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்.

--- தொல் 1604