பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௨௩


டியுள்ளது. இதிலுள்ள அதிகாரத் தலைப்புகளை நிரல் நிறையாக வைத்துப் பொருள் விரித்தே திருக்குறள் முழுமைக்குமான அடங்கியல் கருத்துகளை உட்கவர்ந்து கொள்ள முடியும், என்க.

மாதிரிக்கு, அறவியலில் (பாயிரவியலில்) உள்ள அதிகாரப் பெயர்களையும், இல்லறவியலில் உள்ள அதிகாரப் பெயர்களையும் நிரல் நிறையாக வைத்து, அடங்கியல் பொருள்கொண்டு காட்டுவாம்.

முதலில், திருவள்ளுவப் பேராசான், இவ் வுலகிற்கே ஒளியூட்டி வழிகாட்டுதலாக இப்படி ஒரு நூலை எழுதுதல் வேண்டும் என்று அருளுள்ளம் இரங்கி, எழுத முற்பட்ட நிலையில், எதை முதலில் கூறுவது என்று ஆழ எண்ணி, இவ்வுலக இயக்கத்திற்கே மூல முதலாக உள்ள அறப்பேராற்றலையே முதற்கண் விளக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு, அறமுதல் உணர்தல் (அஃதாவது இதுவரை வழக்கிலிருந்த கடவுள் வாழ்த்து) என்னும் அதிகாரத்தைத் தொடங்கினார்.

அதன்பின்னர், இவ்வுலக இருப்புக்கும் இயக்கத்திற்கும், இதன்கண் வந்து வதியும் ஒன்றுமுதல் ஆற்றாக உள்ள உயிர்களின் தோற்ற வளர்ச்சி, நிலைப் பாடுகளுக்கு அடிப்படையாகவும், அறவுணர்வுக்கே முதலெடுத்துக்காட்டாகவும் உள்ள மாமழையினை நினைவுகூர்ந்து அதன் பொதுமை நல வெளிப்பாட்டினை உணர்த்துதல் வேண்டி, வான்சிறப்பு என்னும் அதிகாரத்தை அடுத்துக் கூறினார்.

பின்னர், அவர் கவனம், வானகத்து நின்று தோன்றும் அறவெளிப்பாடு போலவே, இஞ்ஞாலகத்தும் தோன்றி நின்று, இங்குள்ள உயிர்கள் நலங்காக்கவும் நோக்கவும், தங்கள் இன்ப வாழ்வியல் நாட்டங்களையும் நலன்களையும் நீத்து வாழ்கின்ற அறவுணர்வினர்தம் பெருமைகளை உலக மாந்தர்க்கு உணர்த்துதல் வேண்டியும், மழையறத்தினை அடுத்த, மனவறத் தினைக் கூறுமுகத்தானும் நீத்தார் பெருமையை நினைவுகூர்கின்றார்.

இனி, அதனை அடுத்து, இவ்வானமும், ஞாலமும் உள்ளீடாகக் கொண்டியங்கும் அறத்தின் புரவலர்களைக் காட்டியுணர்த்திய பின்னர், அவ்வறத் தினது உண்மையும் தன்மையும், ஒண்மையும், திண்மையும் என்னென்னென்று உணர்த்துதல் வேண்டியும், அவ்வறவுணர்வினைக் கடைப்பிடித்து வாழும் மெய்யியல் கோட்பாடே மேலாம் என்று இவ்வாழ்வியல் நூல் கற்கப் புகுந்த மக்களின்த்திற்கு உணர்த்துதல் கருதி, 'அறன் வலியுறுத்தல்' என்னும் அதிகாரத்தை அடுத்துக் கூறினார். ஆக, இத்துடன் நுண் அறவியல் விளங்கிற்று என்க. அதன்பின் மண் அறவியல் கருதியது அவர் நெஞ்சம்

அதன் வழி அவ்வருள் நெஞ்சினார் மாந்த வினத்தின் உயிரியங்கியல் கோட்பாட்டின் உலகியங்கலின் முதனிலைப்படியாம் வாழ்வியலைப்