பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௨௮

முன்னுரை 


'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு'

என்று மெய்யுரை கூறினார், என்க.

இனி, திருக்குறளில் கூறப்பெறும் கருத்து வெளிப்பாடுகள் பல்வகையான சொல்முறைகளால் கூறப்பெற்றுள்ளன் என்பதையும், நாம் சிறிது எண்ணிப் பார்த்து மகிழ்தல் வேண்டும். திருவள்ளுவப் பேராசிரியர் தமிழ்மொழியையும் (28), அதன் இனிமையையும் (100,567) அதிலுள்ள சொல்லமைப்புகளையும் 'சொல் வன்மை' அதிகாரத்தையும், 717 குறட்பாவையும் ஓர்க, சொல்லும் முறைகளையும் பயனில சொல்லாமை, இனியவை கூறல், சொல்வன்மை ஆகிய அதிகாரங்களையும் 119,128, 184,387,389,402,415, 453,607,711,712,713,721,826,872,959, 1044, 1046,1096, 1154-ஆகிய குறட்பாக் களையும் ஓர்க) நன்கு உணர்ந்து தெளிந்த சொல்லாய்வுப் பேரறிஞர் ஆகையால் அவர் பின்வரும் கூறல் முறைகளால், திருக்குறட்பாக்களை உருக்கொளச் செய்துள்ளது வியந்து போற்றிப் புகழ்தற்குரியதாம் என்க. திருவள்ளுவர் கையாண்டுள்ள இருபத்தெட்டு கூறல் முறைகள்:

1. நேர்முறை 2. எதிர்முறை 3.இணை முறை 4. எடுத்துக்காட்டு முறை 5. வினா முறை 6. வினாவிடை முறை 7. நயப்பு முறை 8. வியப்பு முறை 9. அணி முறை 10. அமைவு முறை 11. தேர்வு முறை 12. தெளிவு முறை 13. காரண முறை 14. கட்டளை முறை 15. ஆய்வு முறை 16. அங்கத முறை 17. நகை முறை 18. தொகுப்பு முறை 19. பகுப்பு முறை 20. வகுப்பு முறை 21. தந்திர முறை 22. மந்திர முறை 23.கடுமை முறை 24.கனிவு முறை 25 எண்ணுமுறை 26. இருமடிமுறை. 27. சுருக்க முறை 28. பெருக்க முறை ஆகியவை. இக்கூறல் முறை ஒவ்வொன்றிற்கும் இவ்விரண்டு குறட்பாக்கள் எடுத்துக்

காட்டுகளாகக் கீழே தரப்பெறுகின்றன.

1. நேர்முறை: நேரிடையாகக் கருத்தைக் கூறும் முறை)

1. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால் 14

2.அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் 96

2. எதிர்முறை (எதிர் நிலையாகக் கூறி விளங்க வைக்கும் முறை)

1.அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டுர்ந்தான் இடை -37