பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௩௦

முன்னுரை 



2.உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் -294

8. வியப்பு முறை: (கேட்போர் வியந்து கேட்கும்படி கூறுதல்)

1.பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற -61

2.வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம் -85

9. அணிமுறை: (அழகுபெறச் சொல்லுவது)

1. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை -12

2. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து -645

10. அமைவு முறை :(ஒர் ஐயப்பாடு எழுப்பி, அதற்கு அமைவு கூறி விளக்குதல்)

1. சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. -57

2.புறத்தறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு -79

11. தேர்வு முறை (ஒரு கருத்துத் தேர்ந்து உணரும்படி கூறுதல்)

1.மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து -968

2. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை. -1151

12. தெளிவு முறை: (கருத்துச் சிக்கலின்றித் தெளிவு ஏற்படும்படி கூறுதல்)

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு -190

நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று 197

13. காரண முறை (காரணம் கூறிக் கருத்தை விளக்குதல்)