பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௩௨

முன்னுரை 19. பகுப்பு முறை: (ஒரு பொருள் சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட உண்மைகளைத் தனித்தனியே பகுத்துக் கூறுவது)

தொகச்சொல்லித் துரவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் துது 685
 
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு 731

20. வகுப்பு முறை: (ஒரு பொருள் மேல் வந்த பலவாம் தன்மைகளைக் கூறிட்டுக் கூறுவது)

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு 793

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது 865

21. தந்திர முறை: (ஒரு செயலுக்கான தந்திர உத்தியைச் சொல்வது)

காதல் காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல் 440

தன்துணை இன்றால் பகையிரண்டால் தானவற்றுள்
இன்துணையாக் கொள்கவற்றுள் ஒன்று 375

22. மந்திர முறை:(மாந்தர்தம் மனத்தின் வன்மையை எடுத்துக் கூறுவது)

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப

தொல்: 1434

என்றாகலின்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் 28

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தால் வரும் 264

23. கடுமை முறை: (சினங் கொண்டு மிகக் கடுமையாகக் கூறுதல்)

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். 420

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான் 1062