திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
௨௩௩
24. கனிவு முறை (கனிவான முறையில் கூறுதல்)
இனிய உளவாக இன்னாத கூறல்
கணியிருப்பக் காய்கவர்ந் தற்று
100
இரப்பன் இரப்பாரை யெல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று
1067
25. எண்ணுமுறை: (ஒன்று இரண்டு வரிசைப்பட எண்ணிக் கருத்துகளை வரையறுத்துக் கூறுதல்)
படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
381
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால்பு ஊன்றிய துண்
983
26. இருமடி முறை: சொல்ல வேண்டிய ஒருமுனைக் கருத்தையும் மறுமுனைக் கருத்தையும் மடித்துக் கூறுதல்)
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு
963
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
978
27. சுருக்க முறை:(அகன்ற ஆழமான கருத்துகளைச் சுருக்கமான முறையில் கூறுதல்)
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் துண்பொருள் காண்டது அறிவு 424
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். 501
28. பெருக்க முறை (எல்லார்க்கும் பொருள் விளங்குமாறு பெருக்கிக் கூறுதல்)
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர் 393
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. 411 </poem>
எனவாங்கு இங்குக் காட்டப் பெற்ற முறைகள்தாம் என்றில்லாமல், கூறுதல்திறம்கொண்ட முறைகளை நுணுகி ஆராயின் இன்னும்