திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
௨௩௫
வனவாகவும் மிகு பொருத்தம் உடையனவாகவும் உள்ளதை நன்கு உணர்ந்து கொள்ளலாம். இவ்வகையில் இவர் பயன்படுத்தியஎடுத்துக் காட்டிய உவமைகள் ஏறத்தாழ, முந்நூறு அளவினதாகும்
என்க.
அடுத்து, திருவள்ளுவப் பேராசான் ஆங்காங்குக் கூறும் கருத்துகள் அறவியல், அரசியல், பொருளியல், குமுகவியல், மக்களியல், உலகியல், பொது மையியல், பொதுவுடைமையியல், மனவியல், மக்கள் மனவியல், உடலியல், மருத்துவ இயல், தொழிலியல், தொழில் நுட்பவியல், குடும்பவியல், ஒழுக்கவியல், அறிவியல் பகுத்தறிவியல், மெய்யறிவியல், இயற்கையியல், போரியல், காதலியல், காமவியல் முதலிய அத்தனைத் துறைகளிலும் மேம்பட்டுத் தனிச் சிறப்புடன் விளங்குகின்றன என்பதை இந்நூலுள் புகுந்தார் அனைவரும் ஒரு சேர உணர்வார்.
இத்துணை அறிவியல் சிறப்புகளும் இந்நூலுள் ஒரு சேரப் புதைந்திருந்தாலும் இதன் இலக்கியச் சிறப்பைச் சொல்லி மாளாது என்பதையும் நாம் உணர்தல் வேண்டும்.
இவ்விடத்து இன்னும் ஒரு சிறப்பு நிலையைச் சுட்டியே ஆகல் வேண்டும். அதுதான் இந்நூலாசிரியர்க்கே உரிய சொல்லாட்சிச் சிறப்பாம். என்க.
இவர் கையாண்டுள்ள சொல்லாட்சி, சொற்சிக்கனம், சொற்களின் நுண்பொருள் சிறப்பு, புதுச் சொல்லாட்சி, முழுமைப் பொருள் தரும் சொல்லமைப்பு - முதலியவை வேறு எந்த நூலாசிரியர்க்கும் வாய்த்தவை அல்ல என்பதைத் துணிவுடன் கூறலாம். இவற்றை ஒரு சில எடுத்துக் காட்டுகளுடன் விளக்குவது, இவ்விடத்து மிகவும் இன்றியமையாததாம் என்க.
இவ்வியல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குறட்பாவை இங்கு எடுத்துக் காட்டுவோம்;
1. அறவியல்:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அன்னத்துஅறன்
ஆகுல நீர பிற
-34
2.அரசியல்:
அறனிழுக்காது அல்லவை நீக்கி மறனிழுக்காது
மானம் உடையது அரசு
-384
3.பொருளியல்
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரியது இல்
–759
4. குமுகவியல்:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
-972