பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௩௬

முன்னுரை 



5. மக்களியல்:

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்(பு) இல்லா தவர் -997

6. உலகியல்:

உலகத்தோ(டு) ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் -140

7. பொதுமையியல் :

ஒத்த(து) அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும் 214

8. பொதுவுடைமையியல்:

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை -322

9. மனவியல் :

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு -190

10. மக்கள் மனவியல்:

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து -250

11. உடலியல்:

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு -945

12. மருத்துவ இயல்:

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் -948

13. தொழிலியல் :

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார் -463

14.தொழில் நுட்பவியல்:

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு -1038

15. குடும்பவியல் :

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. -45

16. ஒழுக்கவியல் :