பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௩௭



ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும் -133

17. அறிவியல் :

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல் -637

18. பகுத்தறிவியல் :

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்டது அறிவு -423

19. மெய்யறிவியல் :

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லாத வர்க்கு -354

20. இயற்கையியல்:

கெடுப்பது உம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பது உம் எல்லாம் மழை -15

21. போரியல்:

மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு -766

22. காதலியல் :

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு. -1088

23. காமவியல் :

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன் -1109

இனி, திருக்குறளைப் பற்றிப் பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் இது பொருளியலுக்கே முதன்மை தருகிறது எனலாம். பொருளியலில் அரசியலும் அடங்கும். அறவியலுக்கு அதற்கு அடுத்த இடமும், இன்பத்திற்கு மூன்றாம் இடமும் தந்து, இந்நூலை யாத்துள்ளார் ஆசிரியர் எனலாம். பொருளியலுக்கு எழுபது அதிகாரங்களும், அறவியலுக்கு ஏறத்தாழ அதிற் பாதியாக முப்பத்தெட்டு அதிகாரங்களும் இன்பியலாகிய காமத்திற்கு ஏறத்தாழ அதிற் பாதியாக இருபத்தைந்து அதிகாரங்களும் ஒதுக்கியிருப்பதி-