பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௩௯


வைக்கிறார். இதனால், இந்நூல் அறம் என்றும் பெயர் சுட்டி வழங்கப்பெற்றது. தமிழியல் மரபும் அறத்தையே முதன்மையாகக் கொண்டதாம் என்க. அறத்தின் வழியாகவே, அஃதாவது அறத்தைத் தெரிந்துகொண்ட பின்னரே ஒருவர்க்குப் பொருளும் இன்பமும் புகட்டப் பெற வேண்டும் என்பதே இயற்கையாகவும், பொருத்தமாகவும், அறிவுக்கு ஏற்புடையதாகவும் இருக்கிறது என்க. அதனாலேயே தமிழ் முனைவோரும் முன்னோரும் அறிவரும் சான்றோரும் அறத்தை முதன்மைப் படுத்தினர். பின்னர் அதுவே தமிழியல் மரபாயிற்று. அறத்தை முதன்மையாகக் கொண்டே அதன் வழியாகப் பொருளிட்டமும், பின்னிவை இரண்டின் வழியாகவே இன்பியலாகிய காதலும் அதன் கனியாகிய காமமும் நிகழ்தல் வேண்டும் என்று நெறிப்படுத்தினர்; வழிவகுத்தனர்.

இதனைச்

'சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்துவழிப் படுஉம் தோற்றம் போல'

புறம் 31:1-2

என்று தமிழியல் நூல்கள் அனைத்தும் புலப்படுத்தியுள்ளன என்க

இஃதிவ்வாறிருக்க இற்றையறிஞருள், மு.வரதராசனார் போன்ற பேராசிரியர் ஓரிருவர், இந்நிரல் முறையை மாற்றி, அதற்குப் பல்வேறு காரணம் காட்டி, இன்பம், பொருள், அறம் என்று தலைகீழ்ப்படுத்தி நூலும் உரையும் கண்டது தமிழியலுக்கும், அறிவியலுக்கும், ஆய்வியலுக்கும், வாழ்வியலுக்கும் சிறிதும் பொருந்தாதாம் என்று கூறித் தவிர்க்க அது, நிழலைக் கண்டு மரத்தையும், மரத்தைக் காட்டிக் கதிரவனையும் உணர்த்துவிப்பதாம் என்க.

இவர்தம் சொல்லாட்சித் திறனுக்கு எடுத்துக்காட்டுகள்:

மலர்மிசை3), பொறிவாயில் (5), அறவாழி (8), துப்பார், துப்பாய துப்பாக்கி (12), விரிநீர் (கடல் (13), வியனுலகம் (19), இருமை (23), செந்தண்மை (30), அழுக்காறு (35), அறத்தாறு (35),விழ்நாள் (38),செயற்பாலது, உயற்பாலது (40), தென்புலம் (43), பாத்தூண் (44), ஒழுக்கி (48), வாழ்வாங்கு (50), மனைத்தக்க, வாழ்க்கைத் துணை (51), மனைமாட்சி (52), பெருந்தக்க (54), தற்காத்து, தற்கொண்டார் (56), புகழ்புரிதல் (59), மக்கட்பேறு (61), எழு பிறப்பு (62),புன்கணி (71), புறத்துறுப்பு (79),வேளாண்மை (81), (212), (613),(614) (வேளாண்மை என்னும் சொல்லை முதன் முதலிற் கையாண்டவர் திருவள்ளுவப் பேராசிரியரே ஆவர். அதற்கு முன்னர் 'வேளாண்' என்னும் சொல் உழவு என்னும் பொருளில் தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும் ஆளப்பெற்றுள்ளது. ஆனால் மை யீற்றுப் பெயர்ச் சொல்லாக இதை நான்கிடங்களிலும் 'விருந்து' (81), இல்லார்க்குதவுதல் (212), ஈகை கொடை (612, 614) என்னும் பொருள்களில் பயன்படுத்தியவர் இவரே! இவ்வாறாகிய