பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௪௧


5. அறிவின்பாற்பட்ட அறியாமை மயக்கத்தை இருள் (5,352, 1001), மனத்தின் பாற்பட்ட ஆசையால் ஏற்படும் மயக்கத்தை மருள் (199,351,352, 1001) என்று உணர்த்தியதும்,

6. அடைவதற்கு மிக அருகில் உள்ள தொலைவை நணியது (353) என்று கூறியதும்,

7. பெறுவதற்கு மிக அண்மையில் உள்ள காலத்தை நணித்து (856) என்றதும்,

8. உயர் செல்வத்தினின்று ஏழைமை என்னும் வறிய நிலைக்குத் தாழ்ந்து போதலைத் தவல் (853,856) என்றதும்,

9. என்றென்றும் தாழ்வில்லாததும் அழியாததுமாக விளங்கித் தோன்றுகின்ற புகழ் என்பதற்குத் தாவில் விளக்கம் (853) என்றதும்,

10.உலகின்கண் உள்ள ஒளிகளெல்லாம் ஒருநாள் அணையும் அல்லது அழியும் என்னும் தன்மையில், என்றுமே அழியாததாய் நிலைத்து நிற்கும் அறிவை நின்ற ஒளி (698) என்று விதந்து கூறியதும்,

அவரின் மெய்ப்பொருள் உணர்வில் நுண்பொருள் காணும் தன்மையை விளக்கினவாம், என்க.

இனி, அவர் புதுவதாகப் புனைந்து கூறிய புதுமைச் சொல்லாட்சிகளுக்குச் சில எடுத்துக்காட்டுகளைக் காண்க

1. திருமணவுணர்வால் பெண்கள் அடிமைப்படுவதை, விரும்பாத பேராசான், மனைவியைக் குறிக்க வாழ்க்கைத் துணை என்னும் சமநிலை யுணர்வுச் சொல்லைப் பெய்ததும்,

2. அதேபோல் விலை மகளிர் (விலைநலப் பெண்டிர்-புறம் 365; விலைக்கணிகை - பரி20:) விலையாட்டி(- சிலப் 12) பரத்தையர்(தொல் 11-44, நற்230,260:ஐங்:48, 84; பரி9,12:கலி:73,8493,94,96;அகம்256:சிலப்10 பொது மகளிர் கலி.101), கூத்தியர் இலப் : 5,14;மணி. 12,1828), கணிகையர் பரி:20, சிலப்பதி 15,5,11,15,27) மணி 11,13,16,22,21.24.29,100) திரிகடு 24,76,81) காமக்கிழத்தியர் தொல்:I-144, 145, 149), ஆடல் கூத்தியர் : (சிலப் 5) அணங்கியர் குறுந் 119; ஐங்: 250,259, அகம் 322,372), காமராட்டி(காமர் நெஞ்சம், நற்: 242,259.காமர்துணை நற்:162,அகம் 154,காமர் சிறுகுடி நற். 239)-என்றவாறெல்லாம் பொதுப் பெண்டிரை, இழிவு கூறி அழைக்க விரும்பாத அவ்வத்தி லைப் பண்பாசிரியர், அவர்களுக்கென்றே, திருமணம் செய்து கொள்ளாத பெண்டிர் என்றும், எல்லையின்றிப் பழகும் மகளிர் என்றும் பொருள்படும்படி வரைவின் மகளிர் (வரைவுஇல் மகளிர்) என்று புதுச்சொல் .அழைத்ததும்,