பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௪௫


அடுக்கிய கோடி : 954, 1005.

இனி, திருக்குறளில் ஏறத்தாழ 12,000 சொற்கள் பயிலப்பெற்றுள்ளனவாக அறிஞர் கணக்கிடுவர். சரியாக 12505 சொற்கள் என்றும், அவற்றுள் அடிப்படை வேர்ச்சொற்கள் 4310 என்றும், 1330 குறட்பாக்களில் உள்ள வேலாயுதனார், தாம் தொகுத்த 'திருக்குறள் சொல்லடைவு' என்னும் அறிய நூலுள் குறிப்பிடுவார்.

அவற்றுள் ஏறத்தாழ 50 சொற்களே வட சொற்கள் என்பார் அறிஞர் கா. சுப்பிரமணியனார். 123க்கு மேலான வட சொற்கள் என்பர். - பேரா. வையாபுரியார், ஆனால் 17 சொற்களே என்பார் பாவாணர்.

அவர் காட்டும் வட சொற்களும், அவற்றிற்கு அவர் தரும் தமிழ்ச் சொற்களும் வருமாறு:

1. ஆதி - முன்னை, 1,543.
2. இந்திரன் -அரசன், வேந்தன், 25.
3.அந்தம் - ஒருதலை, 563,593. (ஒருவந்தம்)
4. அமரர் - உவணுலகர் (மேலுலகர்)- 121
5. அவி - (ஹவிஸ்) - யாகத்தில் இடுபொருள்
நெய், ஊன் முதலியன 259
6. அன்னம் - எகினம், ஒதிமம்- 1120
7. ஆகுலம்-ஆரவாரம் 34
8. ஆசாரம் - ஒழுக்கம் 1075
9. உல்கு - ஆயம், தீர்வை 756
10. கணம் - நொடி 29
11. காரணம் - கரணி, ஏது 270,529,530
12.சலம் அல்வழி வஞ்சனை 60,956
13.நாமம் பெயர் பேர் 390
14. பாக்கியம் - நற்பேறு 1141
15. பாவம் - கரிசு 146
16. பாவி- கரிசன், அறங்கடையன் 168,1012
17. வித்தகர்- மாதிறவோர் 235