பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/252

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௨௪௮

முன்னுரைமுதலில், திருக்குறள் முழுமைக்கும் ஒரு சமசுக்கிருத மொழிபெயர்ப்பு உண்டு என்று பர். உ.வே. சாமிநாதர் கூறியிருக்கிறார். (நூல் : திருவள்ளுவரும் திருக்குறளும், - 1936)

இதற்கு உலகப் பெரும் பரவல் மொழியாகிய ஆங்கிலத்தில் அறிஞர்கள் பலரின் பல மொழிபெயர்ப்புகள் உண்டு.

1730-இல் வெளிவந்த மதத்தந்தை சி. சோசப் பெசுகி (C.Joseph Beschi) அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பே முதலாவதாகத் தெரிகிறது.

1794இல், இலண்டன், டபுள்யூ பல்மர் குழுமம் வெளியிட்ட, கிண்டர்சலி (N.E, Kindersley) வெளியிட்ட சில மொழிபெயர்ப்புகளுடன் கூடிய நூல் அடுத்ததாகத் தெரிய வருகிறது. அதன் பின்னர்,

அறிஞர் எல்லிசு (P.W. Ellis) அவர்கள் (நூல்) 1812-இலும்,

அறிஞர் டுரு (W.H. Drew) அவர்கள் (நூல்) 1840-இலும்,

அறிஞர் கோவெர் (Charles.E. Gover) அவர்கள் (நூல்) 1871-இலும்,

அறிஞர் இராபின்சன் (Edward.Robinson)அவர்கள் (நூல்) 1873இலும்,

அறிஞர்கள் டுரூவும் இலாசரசும் (மொழி பெயர்ப்பு) 1876இலும்,

அறிஞர் இராபின்சன் (Edward..Robinson) அவர்கள் தெய்விகப் பறையர் என்னும் பெயரில் 1886 இலும்,

அறிஞர் சி.யு. போப் (G.U.Pope) அவர்கள் (மொழிபெயர்ப்பு) 1886இலும்

திருவாட்டி செ.திருநாவுக்கரசு அவர்கள் (மொழிபெயர்ப்பு 1916இலும்

அறிஞர் வி.வி.எசு. அய்யர் அவர்கள் (மொழிபெயர்ப்பு) 1816இலும்

அறிஞர் அ. மாதவையா அவர்கள் (உரை. மொழிபெயர்ப்பு) 1925இலும்,

அறிஞர் எசு.எம். மைக்கேல் அவர்கள் (மொழி பெயர்ப்பு) 1926-இலும்

அறிஞர் எம்.எசு. பூரணலிங்கம் அவர்கள் (திறனாய்வு) 1921-இலிம்

அறிஞர் எச்.ஏ.பொப்பிலிஅவர்கள் (மொழிபெயர்ப்பு) 1931 இலிம்

அறிஞர் எசு. அரங்கநாதர் அவர்கள் (மொழிபெயர்ப்பு) 1933இலும்

அறிஞர் சி.இராசகோபாலாச்சாரி அவர்கள் மொழிபெயர்ப்பு 1937இலும்

அறிஞர் எம்.எசு. பூரணலிங்கம் அவர்கள் மொழிபெயர்ப்பு 1942-இலும்

அறிஞர் வி.ஆர். இராமச்சந்திர (தீட்சிதர்) அவர்கள் மொழிபெயர்ப்பு 1949 இலிம்

அறிஞர் அ. சக்கரவர்த்தி அவர்கள் மொழிபெயரப்பு 1953இலும்

அறிஞர் எம்.ஆர். இராசகோபால (ஐயங்கார்) அவர்கள் மொழிபெயர்ப்பு