பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/255

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

உருக
அறிஞர் தாமோதரம் (பிள்ளை) அவர்கள் தேர்ந்த பல குறள்களின் மொழி பெயர்ப்பு 1951இலும்,

அறிஞர் வன்னிகுளம் கோபால குருப் அவர்கள் மொழிபெயர்ப்பு 1957-இலும்,

அறிஞர் சாத்தமங்கலம் இராமகிருட்டிணன் (பிள்ளை) அவர்கள் மொழி பெயர்ப்பு 1957-இலும் வெளிவந்தனவாக அறியப்பெறுகிறது.

இனி, கன்னட மொழியில் அறிஞர் எல்.குண்டப்பா அவர்கள் மொழி பெயர்ப்பு முதல் பகுதி 1955இலும், இரண்டாம் பகுதி 1960இலும், அறிஞர் ந. முனிசாமி, அவர்களின் மொழிபெயர்ப்பு ஒன்று அண்மையிலும் வெளி வந்தனவாகத் தெரிகிறது.

அடுத்து, தெலுங்கு மொழியில் அறிஞர்கள் வைத்தியநாதன், கானுபதி வெங்கடராமன் அவர்கள் மொழிபெயர்ப்பு 1877இலும்,

அறிஞர் சொக்கம் நரசிம்மலு அவர்கள் மொழிபெயர்ப்பு 1892இலும்,

அறிஞர் பூதலப்பட்டுச் சிரிராமலு இரெட்டி) அவர்கள் மொழிபெயர்ப்பு 1948-இலும்,

அறிஞர் முடிகண்டி செகன்னா (சாத்திரி) அவர்கள் மொழிபெயயர்ப்பு 1952-இலும்,

அறிஞர் காலா இராதாகிருட்டிண (சர்மா) அவர்கள் மொழிபெயர்ப்பு 1954இலும்,

அறிஞர் சலய்யா அவர்கள் மொழிபெயர்ப்பு 1955இலும் வெளிவந் தனவாகத் தெரிகிறது.

இனி அறிஞர் இஞ்சே ரம்லியின் ஆசி நாசிர் அவர்களின் மலாய் மொழிபெயர்ப்பு 1964இலும், அவர்களின் சீன மொழிபெயர்ப்பு 1967இலும்,

அறிஞர் யூ மியோ தாண்ட் அவர்களின் பர்மிய மொழிபெயர்ப்பு 1964-இலும்,

அறிஞர் சாமுவல் எல் பெர்விக் அவர்களின் பிசி மொழிபெயர்ப்பு 1964இலும்,வெளிவந்தனவாகத் தெரியவருகிறது.

கி.பி. 1730இல், திருக்குறளின் முதலிரு பால்களை இலத்தீன் மொழியில் வீரமாமுனிவர் என்னும் (பெஸ்கி பாதிரியார்) மதத் தந்தை மொழி பெயர்த்த நூல்தான், திருக்குறளின் முதல் மொழி பெயர்ப்பாகக் கருதப்பெறுகிறது. அதுமுதல் திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பெற்றுள்ளது. அவ்வகையில் 1983 வரை, இந்நூல் முப்பது மொழிகளில் 117 மொழி பெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. (அறிஞர் கத. திருநாவுக்கரசு - திருக்குறள் விளக்கம் - கட்டுரை வள்ளுவர் வழி (178.83)