பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௫௩


அதன்வழிப் பிழைப்பதும் பெருமை பெறுவதும் அளவினும் மிகுந்து வருவது. திருக்குறளில் ஏதோ ஒருவகையில் தாம் தொடர்பு உடையவர் என்று காட்டிக் கொள்வதே தமிழ் கற்றவர்க்கும், ஏன், பிறர்க்கும்கூட பெருமை தருவதாக இருக்கிறது. எனவே, எல்லாரும் திருக்குறள் கற்றவராகவே காட்டிக்கொள்ள விரும்புகின்றனர்.

இவ் வகையில் அறிஞர் அழகரடிகள் தம் திருக்குறள் அறம் என்னும் நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறுவது கவனிக்கத் தக்கது.

"திருக்குறட் பணி, மிக்க பொறுப்புக்குரியது. அத் தமிழ் மறையை அதன் ஆசிரியர் எவ்வளவு பெரும் பொறுப்புடன் உலகுக்கு வழங்கியிருக்கிறார்! சிறிது தவறு நேர்ந்து பொருந்தாக் கருத்துப் பரவ நேர்ந்தாலும், தலைமுறை தலைமுறையாக எத்தனைக் குடும்பங்களை, எவ்வளவு மக்களை அது கெடுத்து விடும்! நூலாசிரியர்க்கு, அதுவும் மறைநூலாசிரியர்க்கு, இவ்வகையில் எவ்வளவோ பெரும் பொறுப்புள்ளது.”

"நூலாசிரியர்க்கே இந்நிலைமை யென்றால், நூலின் கருத்தை அதுவும் குறட் செய்யுள் வடிவில் உள்ள மறைநூலின் கருத்தை அது இன்னதாகத்தான் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக் கொடுப்பதற்கு இன்னும் எவ்வளவு பெரிய பொறுப்புணர்வு வேண்டியிருக்கிறது!”

"முனைப்பு முற்றும் அற்று, நூலாசிரியர் உள்ளமே தம் உள்ளமாகி அந்நிலைக்கும் மேல் உயர்ந்து, ஒருகால், நூலாசிரியர் சிறிது வழுவினும், தாம் அருளுணர்வாற் செயற்பட்டு அவ்வழுவை நிமிர்த்திச் செப்பமாக்கி, உலகுக்கு வழங்க வேண்டும் கடுமையான பொறுப்பன்றோ உரையாசிரியருடையது."

"தெய்வ மறைநூலாகிய திருக்குறளின் மேல், உரையாசிரியர்க்கு இந்நிலைமை இல்லையென்றே கருதலாம். திருக்குறளின் அழகும் நுட்பமும் நயமும் கண்டு கருத்துணர்த்துதலே உரையாசிரியன்மார்க்கு எளிதன்று."

"உலக நலங்கருதி நூற்கருத்துகளை வெளிப்படுத்துவதில் ஈடுபடுகிறவர்கள், தவறு சிறிதும் நேரக் கூடாதே என்னும் இப்பெரும் பொறுப்பினால் ஒருவகை அச்சமும், அதனைக் கடந்து கடமை நிகழ்வதற்கு அந்நூலின் மேல் ஆராத பேரன்பும் உடையவர்களாக இருப்பார்கள்."

"அன்றியும், செய்யுள் வடிவில் அழியா ஆற்றலுடன் அமைந்துள்ள தரமான நூல்களின் கருத்துகளை வழுவில்லாமல் தெளிவாக உணர்ந்து கொள்வதும், தாம் உணர்ந்து நலம் பெறும் அவ்வுண்மைகளை மற்றவர் களும் தெளிந்து பயனடையும்படி எடுத்து விளக்க முற்படுவதும் அவர்களுக்கு இன்றியமையாக் கடமைகளாகவும் இருக்கின்றன.

அழகரடிகள் - நூல் : திருக்குறள் அறம் முன்னுரை


இந்நூலுக்கு உரைவகுத்தார் பலர். அவர்கள் ஒவ்வொருவரும்