பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

உரு௭


மங்கலம் அழகு, நன்மை புணிணியம்
மதலை தூண் குழந்தை
தகுதி பொருத்தம், நடுவுநிலை தக்கமதிப்பு
மல்லல் வளம் போராடுதல்
மாடு செல்வம் பசுமாடு
மாண்ட சிறந்த,மாட்சிமை கொண்ட இறந்துபோன
மாற்றம் மறுமொழி, விடை வேறாதல்
முதுவர் அறிவுடையவர் முதியவர், கிழவர்
முறுவல் பல் புன்சிரிப்பு
முத்தம் முத்து வாய்முத்தம்
முனிதல் வெறுத்தல் சினத்தல், கோபப்படுதல்
மேவார் விரும்புவார் பொருந்தாதவர்
வாருதல் சொரிதல் வாரியெடுத்தல்
வால் வெண்மை, விலங்கின் வால்
வீறு பெருமை,சிறப்பு மிக்குணர்வு
வெறி நல்லமணம் தீவிர ஆசை, தீவிர உணர்வு
வேண்டுதல் விரும்புதல் கெஞ்சிக் கேட்டல்
வேர்ப்பு வெகுளல் வெயர்வை
வேளாண்மை உதவி,ஈகை உழவு
வைகல் நாள்தோறும் நெருங்குதல்

இவைபோலும் நூற்றுக்கணக்கான சொற்களுக்கு அன்றைய திருவள்ளுவர் காலப் பொருள்கள் காண்டது, அற்றைக் குமுகாயப் பழக்க வழக்கங்களையும், வாழ்வியல் நடைமுறைகளையும் அறிந்திருந்தால்தான் இயலும்.

இனி, இது போலவே அன்றைய வாழ்வியல், இனவியல், பொருளியல், அரசியல், பண்பியல், கலையியல், நாகரிகம் - முதலிய மக்களியல் கூறுகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் உயர்த்துணர்தலும், நூல்வழியான,