பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

உருகூ


கோவையில் முரண்பாடுகளும் தோன்றிவிட்டன.”

"பேராசிரியர் சாரங்கபாணி அவர்களின் திருக்குறட் சிந்தனைகள்-பக் 124 (1979) புள்ளிக் கணக்கின்படி, அறத்துப்பாலின் 380 குறட்பாக்களில் 217க்கும், பொருட்பாலின் 700 பாக்களில், 487க்கும், காமத்துப்பாலின் 250 குறட்பாக்களில் 196க்கும், ஆக மொத்தம் 1330 குறட்பாக்களில் 900 பாக்களுக்கு உரைவேறுபாடுகள் காணப்படுகின்றன.”

"முப்பால் மூலநூலில் இல்லாத கருத்து முரண்பாட்டிற்கு இன்னுமொரு காரணம், திருக்குறளில் அவ்வப்போது பல பாட பேதங்கள் புகுத்தப் பட்டமையே. ஒரு பழைய நூலில் பாட வேற்றுமைகள் தவிர்க்க இயலாதவைதாம். ஆனால், நூற்கருத்தையும் பொருளையும் மாற்றியமைக்கும் பாட பேதங்கள் மூல நூலின் முழுக் கருத்தில் சிதிலமுண்டாக்கி விடுகின்றன."

"திருக்குறளுக்குப் பல நூற்றாண்டுகளாகச் சரியான உரை எழுதப் படாமையும், பெரும்பாலனவர்களால் அந்நூல் அடிக்கடி பயிலப் படாமையும், ஏடு எழுதுவோரால் ஏற்பட்ட குறைபாடுகளும், படிகள் எடுக்கும் போது உருவான இயல்பான தவறுகளும், இலக்கண முறைமையை எண்ணிப் புகுத்தப்பட்ட திருத்தங்களும், திருக்குறள் -இலக்கிய நூல், அறநூல் என்ற அணுகுமுறையால் உந்தப்பட்டு, இயைபு காண்பதற்காக எழுந்த வேற்றுமைகளும், பத்து நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த உரையாசிரியர்கள் மேலே கூறிய பதின்மர் தத்தம் சமய, சமுதாய, தனிக் கொள்கைகளின் தாக்கங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்ட கருத்துத் திருத்தங்களும் குறள் நூலின் பாட வேறுபாடுகளுக்கும் அடிப்படைக் காரணங்களாயின.”

"திருக்குறளில் கந்திலியார்என்ற போலிப் புலவர் மிகைபடு பொருளை நகைபடு புன்சொலில் தந்து இடைமடுத்த பிழையினை - அஃதாவது இடைச் செருகலாகச் சில பொருந்தாப் பாடங்களைப் புகுத்தியதைத் தொண்டெனப் புரிந்துவிட்டார். அது காரணமாகப் பொருள் மாறுபாடுகள் ஏற்பட்டு உரையாசிரியர்கள் திண்டாடியிருக்கின்றனர். வள்ளுவ வடிவமே புரியாத நிலைக்கு ஒரளவு அல்லற்பட்டிருக்கின்றனர்.

- எனப் பேராசிரியர் செ. வைத்தியலிங்கம் தெளிவாக்குகிறார்”

- (மேற்கோள் குறிப்பு, 4"உரை வேறுபாடுகள்” (பக்.150)


"பாட பேதங்கள் இல்லாத திருக்குறள் மூலநூல் கிடைக்காததால் இன்றிருக்கும் குறட்பாக்களைக் கொண்ட, திருக்குறள் இயம்பும் உட்பொருளைக் கண்டு தெளிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.”

"திருக்குறள் எழுதப்பட்ட காலத்துக்கும் உரைகள் தோன்றிய காலத்துக்கும் இடையிலான நீண்டகாலப் பகுதி (1000 ஆண்டுகள்) உரையாசிரியர்களின் உரை வேற்றுமைகள், அவர்கள் செய்த மாறுபட்ட இயல்