பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௬௫


லுள்ள குறட்பாக்கள் மட்டும் இவர் புதுவதாகப் புனைந்துகொண்ட, இல்வாழ்வியல் முதலிய ஐம்பெரும் இயல்களுக்குள் வேறு வேறு வகையுள் அடக்கப் பெற்றுள்ளன. இவற்றை விரிக்கில் பெருகும். விரிவை இவர் நூலுள் கண்டு கொள்க.


3. சில பெயர் மாற்றங்கள்

புதுப்பெயர் கொண்டு உள்ளவை
1. அறன்வலியுறுத்தல்
2. வாழ்க்கைத்துணை நலம்
3.பெண்வழிச் சேறல்
4. சுற்றம் தழால்
5. விருந்தோம்பல்
6. அருளுடைமை
7. அடக்கமுடைமை
8. பொறையுடைமை
9. அழுக்காறாமை
10. ஒழுக்கமுடைமை
11. இனியவை கூறல்
12. பயனில கூறாமை
13. புறங்கூறாமை
14. செய்ந்நன்றியறிதல்
15. தீவினை அச்சம்
16. இன்னா செய்யாமை
17. மருந்து

மாற்றம் பெற்றவை
குறளறம்
வாழ்க்கைத்துணை
ஆணடிமை அகற்றல்.
சுற்றம் தழுவல்.
புதியவரைப் பேணுதல்.
அருள்.
அடக்கம்.
பொறுமை.
அழுக்குவழி அகற்றல்.
ஒழுக்கம்.
இனிய செயல்.
பயனிலாச் சொல்.
புறஞ்சொல்.
நன்றியறிதல்.
தீயவை அஞ்சுதல்.
துன்பம் செய்யாமை.
உணவு வரம்பு.





போன்றவை முழு மாற்றங்களையும் அவர் நூலுள் கண்டு கொள்க.

4. சில எடுத்துக்காட்டுகள்

1.மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு –454