பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

உரு


செயலார்வவுணர்வுகளுக்கு மதிப்பளிப்பாகவே இம் மெய்ப்பொருளுரைச் சுருக்கத்தின் முதற்பகுதியாக நூறு குறளுரைகளடங்கிய தெண்ணுரல் புறப்படுத்தப் பெற்றுள்ளது! இது ஐயா அவர்களின் அறுபானாட்டை நிறைவுப் போழ்திலேயே கையகங்கிட்டி நெஞ்சகம் நிறைவித்தாக வேண்டும் என்னும் அவ்வார்வலர்களின் திட்டமீட்டின்படியே இங்ஙனம் திருவும் உருவும் எய்தித் திகழ்ந்து நிற்கின்றது!

சோற்றுப்பதம் பார்க்கும் முயல்வாக இச் சுருக்கவுரையுள் அடங்கி மிளிறும் தகைமையை, ஒருவாறு தொட்டுச் சுட்ட வேண்டுவதும் ஈண்டு எனக்கு ஒதுக்கப்பெற்றுள்ள தகவுரை கூறுங் கடப்பாட்டுள் ஒரு கூறு!

இச் சுருக்கவுரையமைப்பு, - மூலப்பா, பொருள்கோள் முறை சில விளக்கங்கள் என்னும் பொதுக்கட்டமைப்போடும், உரிய பாலுக்கும் இயலுக்கும் அதிகாரத்திற்கும் உரிய முன்னுரை முதலாய அறிமுகமன்களாகிய தோற்றுவாய்க் கட்டமைப்போடும் முறையுற நடையிடுகின்றது!

உரையாசிரியர்கள் வழிவழியாகப் பயின்றுவந்த முதற்பாயிர அதிகாரப் பெயர்க்குப் புத்ததிகாரத் தலைப்பில் மாற்றங் கொடுத்துள்ள ஐயா அவர்களின் உர மறம், உரைவரைவில் ஓர் அறவரண் சான்றது! சான்றாகப், - பாயிரவியற் பகுதியுளடங்கிய நான்கு அதிகாரங்களுள் தலைச் சிக்கலுடைய தலைமைப் பாயிரப் பகுதியையே கொள்ளலாம்! அத் தலைமைப் பாயிரமாகிய முதலதிகாரத்தின் தலைப்பாக . மணக்குடவர் முதல் பரிமேலழகர் வரை “கடவுள் வாழ்த்து” என்றவாறே குறிக்கப்பெற்று வந்தது!

திருக்குறட்கண் அடங்கிய அதிகாரத் தலைப்புகள் யாவும், அவ்வவ்வதிகாரத்தின் முதற்குறளிலுள்ள அதிகாரப் பொருளை உணர்த்தும் சொல்லையோ - பொருளையோ கொண்டிருப்பதன் அடிப்படையை உற்றுக்கண்ட திரு.வி.க. அவர்கள், இம் முதற்பாயிரத்தின் தலைப்பு “ஆதிபகவன்” என்றோ “உலகமுதல்” என்றோ இருக்கலாமெனக் கருத்துத் தெரிவித்துவிட்டுப் - பல்லேட்டுத் தொடர்ச்சிவழிப்பயில்வு காரணமாக - மாற்றத் துணியாமலேயே “கடவுள் வாழ்த்து” என்பதையே ஏற்று முன்னுரையாசிரியர்களின் அடிசேர்ந்தார். “சுகாத்தியர்” என்பார், அதனை “முதற் பொருள் வாழ்த்து” என்றவாறு இவருக்கும் முற்பட்டு